1362திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

வகையால் மகளாராயினவர். "யாவர்க்குந் தந்தைதா யெனுமவரிப் படியளித்தா, ராவதனா லாளுடைய பிள்ளையாராய்" (1967). இவ்வாறன்றி மகனார் - முருகப் பெருமான் என்றுரைகொள்வா ருரைகள் பொருந்தாமை முன் பலவிடத்தும் காட்டப்பட்டது.
இறைஞ்ச - திருமகனா ரணைந்தார் என்று கொண்டு உரியவாறு வழிபாடு செய்யும் பொருட்டுக் கண்ட இடத்தே நிலமுற வீழ்ந்து வணங்கினார் என்பது. இறைவர் - குரு - பெரியோர் இவர்களைக் காட்சிப்படக் கண்ட தூரத்தேயும் வீழ்ந்து வணங்குதல் வேண்டுமென்பது விதி. இவர்கள் இங்குப் பிள்ளையாரைக் காணாவிடினும் அவருடன் வரும் திருத்தொண்டர் கூட்டித்தினைக் கண்டாராதலின் அவருள்ளே அவருமிருப்பதைக் கருதலளவையாற் கண்டு வணங்கினர் என்க.
அணைந்தார் - இறந்தகாலம் விரைவுப்பொருள் குறித்து நின்றது.

1074

2973. (வி-ரை.) காழிநாடர் - பிள்ளையார். மணிச் சிவிகை - மணி -மணிகளுட் சிறந்த முத்தினைக் குறித்தது; இதுபற்றி முன் உரைத்தவற்றை நினைவுகூர்க. கதிர்மணி - இயல்பாக நீற்றினொளியினை வீசுகின்ற. "வெண்ணீற் றொளிபோற்றி (2115).
சூழ் இரும் பெருந்தொண்டர் - சூழ் - இறைஞ்சி எழுந்து வந்து சூழ்ந்த; இரும் - அளவில்லாத. பெருந் தொண்டர் - பெருமை - தொண்டினிர்மையின் பெருமை குறித்தது.
தொழுது எழுந்தருளி - தொழுதுகொண்டு அதன்பின் எழுந்தருளி - நடந்தருளி. இதனால் நகரணிமை கருதப்படும்.
வணிகர் செய்திறம் வாழி மாதவர் சொலக் கேட்டே - என்க; வாழி - அசை; திறம் - முன்னின்ற சிவநேசரது அடிமைத் திறத்தினையும் முன் நிகழ்ந்த பூம்பாவையாரது வரலாறுகளையும்; இவற்றை அடியவர்கள்சொல்லியது அவர்களது கருணைத்திறத்தினை விளக்குவதாம். என்னை? சிவநேசரைப் பிள்ளையார் திருமுன்புஅறிமுகப்படுத்தும் வகையால் அவரது உள்ளக்கிடையினை நிறைவேற்றியருளுதல் வேண்டும் என்று குறிப்பால் விண்ணப்பித்தபடியாம் என்க. அவ்வாறே அதனைப் பிள்ளையார் திருவுள்ளத் தமைத்து, அவர் செயல் வாய்ப்பப் பெருங்கருணை நோக்கால்மகிழ்ந்தருளியமை (2975) மேலுரைக்கப்படுதல் காண்க. இவ்வாறு அடியார்கள் பிள்ளையார் திருமுன்பு அடைந்தாரை வழிப்படுத்தி நலஞ்செய்தல் முன் திருமறைக்காட்டின் நிகழ்ச்சியாலும் (2513), பிறவாற்றாலுமறிக; ஆண்டுரைத்தவையும் பார்க்க.
செய்திறம் -பாவையார்பாற் செய்தனவும் செய்வனவுமாகியவை.
வணிகர் தந்திறம் - என்பதும் பாடம்.

1075

2974
அத்தி றத்துமுன் நிகழ்ந்தது திருவுள்ளத் தமைத்துச்
சித்த மின்புறு சிவநேசர் தஞ்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர் புறத்துறை யழிய
வைத்த வப்பெருங் கருணைநோக் கான்மகிழ்ந்த தருளி,

1076

2975
கங்கை வார்சடை யார்கபா லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுந் தொழுதுபுக் கருளி
மங்கை பங்கர்தங் கோயிலை வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேற் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்;

1077