[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1363

2976
தேவ தேவனைத், திருக்கபா லீச்சரத் தமுதைப்,
பாவை பாகனைப், பரிவுறு பண்பினாற் பரவி,
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையாற் போற்றினார் ஞானசம் பந்தர்.

1078

2974. (இ-ள்.) அத்திறத்து......அமைத்து - வணிகரது அத்திறத்தினில் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியினைத் தமது திருவுள்ளத்தே (பிள்ளையார்) அமைத்துக்கொண்டருளி; சித்தம்.....வாய்ப்ப - மனத்தில் இன்புறும் திருத்தொண்டராகிய சிவநேசரது செயல்வாய்த்திட; பொய்த்த வச்சமண்....அழிய - பொய்யாகிய தவத்தை மேல்கொண்டுழலும் சமணர் சாக்கியர்களுடைய புறத்துறைகள் அழிய; வைத்த.....மகிழ்ந்தருளி திருவுளங்கொண்ட அந்தப் பெரிய திருஅருள் நோக்கத்தினால் மகிழ்ந்தருளி,

1076

2975. (இ-ள்.) கங்கை......அணைந்து - கங்கையைத் தரித்த நீண்ட சடையினையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கபாலீச்சரமென்னும் திருக்கோயிலினை அணைந்து; துங்க....புக்கருளி - பெரிய நீண்ட ஒளிபொருந்திய திருக்கோபுரத்தைத் தொழுது உள்ளே புகுந்தருளி; மங்கை....வணங்கி - அம்மையைப் பங்கில் வைத்த இறைவரது திருக்கோயிலினை வலம் வந்து வணங்கி; செங்கை....சேர்ந்தார் - சிவந்த திருக்கைகள் தலையின் மேலேறிக் குவிய இறைவரது திருமுன்பு சேர்ந்தனராகி;

1077

2976. (இ-ள்.) தேவ தேவனை - தேவதேவராயுள்ளவரை; திருக்கபாலீச்சரத்து அமுதை - திருக்கபாலீச்சரத்தில் எழுந்தருளிய அமுதம்போல்பவரை; பாவை பாகனை - அம்மையொருபாகரை; பரிவுறு...பரவி - அன்புபொருந்திய பண்பினாலே துதித்து; மேவு......விழுந்து - பொருந்திய காதலினாலே விரும்பிய விரைவினாலே நிலமுற விழுந்து பணிந்து; நாவின்....ஞானசம்பந்தர் - திருநாவிற் பொருந்திய உண்மைத் திருவாக்கினாலே திருஞானசம்பந்தர் போற்றியருளினார்.

1078

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்கநின்றன; முன்னிரண்டு பாட்டுக்களை மட்டும் ஒருமுடிபுபடுத்தி உரைப்பினு மிழுக்காகாது;
2974. (வி-ரை.) அத்திறத்து முன் நிகழ்ந்தது - முன் பாட்டிற் கூறியபடி அடியவர்கள் சொல்லிய "வணிகர் செய்திறம்" (2973).
திருவுள்ளத்து அமைத்து - தமது திருவுள்ளத்துட்கிடையாகக் கொண்டு; மனங்கொண்டு.
சித்தம் இன்புறு சிவநேசர் தம் செயல் வாய்ப்ப - இன்புறும் - "அடைவு துன்புறுவதற் கில்லையா நமக்கென்றே, யிடரொழிந்த பின்" (2964) என்றபடி மகளார் போயினமைபற்றி இடரொழிந்தமையே யன்றிப் பிள்ளையாருக்கு ஆம்பரிசு எண்ணிமனத்தினுள் இன்பமும் கொண்டு விளங்கிய; செயல் வாய்த்தலாவது அவர் பாவையாரது உயிர் அங்கு இருப்பதாகவே பாவித்துச் செய்த உண்மையாகியே நிகழ. செயல் வாய்த்தல் - செயல் நிகழ்தல் பாவையார் உயிர் பெற்றெழுந்து வருதல் என்பது.
பொய்........அழிய - நடுநாடு - சோழநாடு - பாண்டிநாடுகளில் அந்நாளில் எங்கும் பரவி இன்னல் விளைத்தமைபோலவே தொண்டை நாட்டிலும் அந்நாளில் இவ்வகையார்கள் பரவி நின்றனர் என்பதாம். புறத்துறை அழிய - சமண சாக்கியர்களழிய என்னாது அவர்களது கட்டுப்பாடாகிய புறச்சமயத் தீமை ஒழிய என்றமை காண்க.