1364 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| அவற்றால் சைவத் திறத்துக்கு நேரும் தீமைமட்டில் ஒழிப்பது கருத்து என்று முன் அங்கங்கும் உரைத்தமை காண்க. "அமண் - இருஞ் சாக்கியர்க ளெடுத்துரைப்ப" என்றது பதிகம். இதற்கு ஆசிரியர் "தேற்ற மில்சமண்சாக்கியத் திண்ணரிச் செய்யேற்ற தன்றென வெடுத்துரைப்பா ரென்றபோது" (2988) என்று பொருள் விரித்தமையும் காண்க. அவர்களது பொய்மை அழிந்துபோதலும் (2992) பின் உரைக்கப்படும். சமண் சாக்கியர்கள் அந்நாளில் (6-7-8-நூற்றாண்டுகளில்) தமிழ்நாடு முழுமையும் பரவிச் சைவத்துக்குக் கேடு சூழ்ந்தமை நாட்டு நடப்புச் சரிதத்தலும், அரசுகள்புராணம், தண்டியடிகள் புராணம், நமிநந்தியார் புராணம் முதலிய வரலாறுகளாலும், தேவாரத் திருவாக்குக்களாலும், பழைய கல்வெட்டுக்கள் முதலியவற்றாலும் அறியக்கிடக்கின்றது பொய்த்த அச்சமண் - என்று பிரித்து உரைத்தலுமாம். | | வைத்த அப் பெருங்கருணை நோக்கால் - மேற்கொண்ட அந்தப் பேரருள் திருநோக்கத்தால். | | முன் நிகழ்ந்தது....வைத்த அப் பெருங்கருணை நோக்கால் - வணிகர் செய்திறஞ் சொலக் கேட்டே திருநகரினை அணைந்து திருக்கபாலீச்சரத்தினை அணைகின்ற பிள்ளையார் வணிகரது அன்பின் திறத்தினுக்கு மகிழ்ந்து கருணைநோக்கம் கொண்டு அத்தகைய அன்பரது பேரன்பின் கருத்தை முற்றுவித்து அன்ப ரன்பின்றிறம் வெளிப்படுக்க நினைந்தருளினார்; செயல் வாய்ப்ப என்றது இக்குறிப்பு. இனி, அவ்வாறு மகிழ்விக்கும் ஒரு செயல்கொண்டே அன்பின் செய்கைக்கு மாறு விளைத்துநிற்கும் புறத்றைகள் அழியவும் திருவுளங்கொண்டருளினர். அச்செயலாவது விடத்தினால் வீந்த பின்னும் அவராகவே கொண்டு சிவநேசர் வழிபட்டுவரும் பூம்பாவையாரது எலும்பும் சாம்பரும் முன்போலப் பெண்ணாக உயிருடன் வரச் செய்தலாம் என்பதும் பிள்ளையார் திருவுளங்கொண்டருளினர். இது பிள்ளையார் இறைவரைக் கருதி வழிபட்ட (2976) தன்மையினாலும் அதனைத் தொடர்ந்து நிகழும் பின்நிகழ்ச்சியினாலும் அறியப்படும்; இவ்வாறு நினைந்தருளியமை தமது புகழும் பெருமையும் கருதியோ? அன்றிப், பாவையாரை அவர்தரத் தாம்பெறும் தன்மை கருதியோ? அன்றிப், பெருவணிகரின் மகிழ்ச்சி காணக் கருதியோ? அன்றி, வேறாய உலக நலங்கள் கருதியோ? அன்று என்பது வெளிப்படை; அன்பின்றிறமும் சிவனருளும் வெளிப்பாடுற்று உலகத்தை உய்விக்கவந்த பெருங்கருணைத்திற மொன்றே காரணமென்க. ஆளுடைய அரசுகள் அப்பூதியார் திருமகனாரை விடத்தினின்றும் நீக்கி யுய்வித்தநிலையின் காரணம்" அன்றவர்கள் மறைத்ததனுக் களவிறந்த கருணையரா" யினமை (1473) என்றும், நம்பிகள் முதலைவாயினின்றும் பிள்ளையை அழைப்பிக்கும் காரணம் "மைந்தன் றன்னை யிழந்ததுயர் மறந்து நான்வந் தணைந்ததற்கே சிந்தை மகிழ்ந்தார்" (வெள். சருக் - 9) என்ற நிலையா மென்றும் ஆசிரியர் காட்டியருளும் திறம் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. முன் (1473) உரைத்தவை பார்க்க (III - பக். 323 - 324). | | புறத்துறை அழிய - பரசமய நிராகரிக்கவும் நீறு ஆக்கவுமே பிள்ளையாரை இறைவர் அளித்தருளினா ராதலின் தொண்டை நாட்டிற் செய்யநின்று எஞ்சிய அப்பணியை நிறைவாக்க என்பது கருத்து. நடுநாட்டில் அரசுகளது வருகையாலும், பாண்டிநாட்டிலும் சோழ நாட்டிலும் பிள்ளையார் செய்கையாலும், புத்தர்வாத நிகழ்ந்த வகையாலும், மேலும் சோழ நாட்டில் நமிநந்தியார் தண்டியடிகள் நிகழ்ச்சிகளாலும் புறத்துறைகள் உண்மைச் சைவத்துக்கு இடையூறு விளைத்தநிலைகள் யழிந்தனவாதலின், எஞ்சி நின்றது தொண்டை நாட்டின் பணியேயாதலின் அதனைத் திருவுளங் கொண்டருளினர். |
|
|
|
|