[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1367

நாவின் வாய்மையில் - என்பதும் பாடம்.

1078

2977
போற்றி மெய்யருட் டிறம்பெறு புரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியினிறைமயிர்ப் புளகங்க ணெருங்கக்
கூற்ற டர்த்தவர் கோயிலின் புறம்புபோந் தருளி
யாற்று மின்னருள் வணிகர்மேற் செலவருள் செய்வார்,

1079

2978
"ஒருமை யுய்த்தநல் லுணர்வினீ! ருலகவ ரறிய
அருமை யாற்பெறு மகளென்பு நிறைத்தவக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலிற் கொணர்"கென்று செப்ப,

1080

2979
அந்த மில்பெரு மகிழ்ச்சியா லவனிமேற் பணிந்து,
வந்து தந்திரு மனியினின் மேவி,யம் மருங்கு
கந்த வார்பொழிற் கன்னிமா டத்தினிற் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர் குடத்தைவே றெடுத்து,

1081

2980
மூடு பன்மணிச் சிவிகையுட் பெய்துமுன் போத,
மாடு சேடிய ரினம்புடை சூழ்ந்துவந் தணைய,
ஆடன் மேவினார் திருக்கபா லீச்சர மணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச் சிவிகையை நீக்கி,

1082

2981
அங்க ணாளர்த மபிமுகத் தினிலடி யுறைப்பான்
மங்கை யென்புசேர் குடத்தினை வைத்துமுன் வணங்கப்,
பொங்கு நீள்புனற் புகலிகா வலர்புவ னத்துத்
தங்கி வாழ்பவர்க் குறுதியா நிலைமைசா திப்பார்,

1083

2982
மாட மோங்கிய மயிலைமா நகருளார், மற்றும்
நாடு வாழ்பவர், நன்றியில் சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந் தெய்தியே மலிய,
நீடு தேவர்க ளேனையோர் விசும்பிடை நெருங்க,

1084

2983
தொண்டர் தம்பெருங் குழாம்புடை சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயினே ரணைந்து
வண்டு வார்குழ லாளென்பு நிறைந்தமட் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.

1085

2984
"இந்த மாநிலத் திறந்துளோ ரென்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாந் தன்மை
அந்த வென்பொடு தொடர்ச்சியா" மெனவரு ணோக்காற்
சிந்து மங்கமங் குடையபூம் பாவைபேர் செப்பி,

1086

2985
"மண்ணி னிற்பிறந்த தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல்