1386திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

டார்கள். ஒரு பள்ளியைப் பழுதுபார்ப்பதற்காக 40 ஆண்டுகளின் முன் நிலத்தைத் தோண்டிப் பார்த்ததில் பல உருவங்களைச் சிலைகளும் கற்களும் கிடைத்தன. அவைகளைக் கொண்டு அந்த இடத்தில் பழைய கோயில் இருந்ததாக ஊகிக்கலாம். இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கம் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை அறியாது அவைகளைத் தாறுமாறாக இணைத்துவிட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பதுவரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் எதுவும் இல்லை. அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் பாவப்பட்டிருக்கின்றன. பழுதுபார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியலார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ்க் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும்; மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம். மேலும், சிவநேசச் செல்வர் திருமனை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது. ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவநாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம் மலையிலும் பரங்கியர்கள் கோயிலையும் மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும். அதற்குச் சான்றுகள் மேல்கூறிய புதைந்த கல்வெட்டுக்களேயன்றிக் கோட்டைத் தெரு என்ற வழக்கப் பெயரும் கொடிமரம் முதலிய சின்னங்களுமேயாம்.
பிந்திய சரிதம் :- H.D.Love என்பவர் எழுதிய சென்னைச் சரிதத்தில் 1516 முதல் போர்த்துக்கீயர் துருக்க மூர்கள், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக்கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume I பக்கம் 321 - 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672 ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சுச் சேனையின் ஒரு பகுதி கபாலீசுவரர் சன்னிதியில் ஒளிந்துகொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672 லேயே இருந்தது எனலாம். 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது. இத் திருக்குளத்தைப்பற்றி ஒரு கர்ணபரம்பரைக் கதையுண்டு. முகம்மதியர் வேண்டுகோளுக்கிணங்கி நவாப்பு கபாலீசுரர் ஆலயத்திற்கு மேற்கே ஒரு பள்ளிவாசலைக் கட்டிவிட்டானாம். இந்துக்கள் அதனை எடுத்துவிடவேண்டும் என்று மன்றாடிக் கேட்க, நவாப்பின் இந்து மந்திரி நவாப்புக்குத் தெரிவிக்காமல் அவன் இல்லாதபோது ஒரே இரவில் பள்ளிவாசலை அடித்து அந்த இடத்தில் திருக்குளம் தோண்டிவிட்டதாகவும், நவாப்பு வந்தபிறகு வேறு எதுவும் செய்யமுடியாமல் முகரம் பண்டிகையின்போது முகம்மதியர்கள் தாஜிகளை அக்குளத்தில் கழுவிக்கொள்ளலாம் என்ற உரிமை தந்ததாகவும், அதுமுதல் அவ்வாறே நடப்பதாகவும் மக்கள் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.
புராணம் :- இத்தலத்தின் புராணம் திருமயிலைத் தலபுராணம் என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் கபாலீசுவரம்