[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1377

சொல்லுந்தோறும் முறையாக வந்து வந்து; "வள்ளல் வரவர வந்தொழிந்தானென் மனத்தே, யுள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந், தெள்ளுங் கழல்" (திருவா - கோத் - 19); இவ்வாறு படிப்படியாய் அமுதம் நிறைந்த விளைவின் முறையை வரும் மூன்று பாட்டுக்களில் வைத்து "அடைவே" என்ற குறிப்புங்காட்டிக் கூறுவார்.
உருவமாய்த் தொக்கது - தொக்கது - படிப்படியாக வளர்ச்சி முறையிற் கூடிற்று; கருப்பத்தூறிக் குழவிகள் வளரும் முறையை உடற்கூற்று நூலார் கூறுதல் காண்க; உருவமாய் - அந்த வளர்ச்சி முறையில் அங்கங்கள் உருவெமடுத்து; "கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி, உருவாகி" (தேவா - தாண் - ஆரூர் - 6); "என்போ டியைந்த வழக்கு" (குறள்) என்புழிப்போல், ஈண்டுப் பாவையாருக்கு இம் மறுபிறப்பின் வரும் உடம்பு முன் உடலின் எஞ்சிநின்ற எலும்பினைப்பற்றி உளதாயிற்று என்க. எலும்பே மக்களுடலுக்குத் தாரகமாய்த் தாங்கி நிற்றற் சிறப்பு நோக்கி அதனையே உடம்பென்பதும் வழக்காயிற்று. "எம்பு முரியர் பிறர்க்கு"( குறள் என்றதும் காண்க.
அக்குடத்துள் - எலும்பும் சாம்பலும் நிறைத்ததும், பிள்ளையர் தம்பிரான் கருணையின் பெருமையே கருதி (2983) அருணோக்காற் (2984) கண்டதுமாகிய அந்த என அகரம் முன்னறிசுட்டு. அக்குடத் தடங்கி" (2987) என்றும், "குடமுடைந்து" (2988) என்றும் தொடர்ந்து கூறும் குறிப்பினும் காண்க. உருவப் பகுதிகள் முறையே நிரம்பிக் கூடுதற்குப் புறக்காவலாக அமையுங் கருப்பை, முட்டையோடு, முதலியவை போல நின்றது அக்குடம் என்பது.
"இதனாற் பதிக முதலுமீறுங் கபாலீசர் திருநாமமும் போந்தவாறு காண்க" என்பர் ஆறுமுகத் தம்பிரானார்.

1088

2987
ஆன தன்மையி னத்திருப் பாட்டினி லடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி
ஏனை யக்குடத் தடங்கிமுன் னிருந்தெழு வதன்முன்
ஞான போனகர் பின்சமண் பாட்டினை நவில்வார்;

1089

2988
"தேற்ற மில்சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை
ஏற்ற தன்றென வெடுத்துரைப் பா"ரென்ற போது
கோற்றொ டிச்செங்கை தோற்றிடக் குடமுடைந் தெழுவாள்
போற்று தாமரைப் போதவிழ்ந் தெழுந்தனள் போன்றாள்;

1090

2987. (இ-ள்.) ஆன தன்மையில் - முன் நான்கு பாட்டுக்களிற் கூறிய அவ்வாறாயின தன்மையினாலே; அத்திருப்பாட்டினில் அடைவே - மட்டிட்ட என்று தொடங்கிய அத்திருப்பாட்டினைத் தொடர்ந்து முறையே பாட்டுத்தோறும்; போன...நிரம்பி - போயின பிராணவாயுவும் உருவம் பெறும் அங்கப் பகுதிகளும் அழகும் முறையாக நிரம்பி; ஏனை......எழுவதன் முன் - வேறாகிய அந்தக் குடத்தின்கண்ணே முன்னர்த் தொக்குக் கூடியிருந்து உரியவாறு வெளிப்பட்டு எழுவதன் முன்பு; ஞானபோனகர்...நவில்வார் - ஞானவமுதுண்டவராகிய பிள்ளையார் பின் முறையாக அருளும் சமண் பாட்டாகிய பத்தாவது திருப்பாட்டினை அருளிச் செய்வாராய்;

1089

2988. (இ-ள்.) தேற்றமில்...என்றபோது - தெளிவாகிய அறிவில்லாத சமண சாக்கியர்களாகிய தீயவர்கள் இந்தச் செய்கை ஏற்றதன்று என்று எடுத்துச் சொல்வார்