[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1379

இச்செய்கை ஏற்றதன்றென - நிகழ்ச்சியின் முன், இது செய்யவியலாததொன்று எனவும், அது கண்டபின், எமது சமய மேன்மைகளின் புரட்டுகளுக்குப் பொருந்தாது எனவும் உரைக்க நின்றது. எடுத்துரைப்ப என்ற பதிகப் பகுதிக்கு ஏற்றதன்றென எடுத்துரைப்பார் எனப் பொளுரைத்துக் காட்டியவாறு.
என்றபோது - என்ற பாட்டினை முடித்தருள்கின்றபோது.
செங்கை தோன்றிடக் குடம் உடைந்து எழுவாள் - குழவிகள் பிறக்கும்போது தலை - கை- கால் என்ற ஏதேனும் ஒரு அவயவம் முதலில் வெளிப்படப் பின்னர் உடல் முழுதும் தோன்றுதல் உடல்நூல் உண்மை. அன்றியும், குழவியின் தோற்றத்துக்கு முன் அதன் உடலை முழுதும் தன்னுள் ஊரிய நீரினுள்ளே கொண்ட பனிக்குடமுடைந்து, பின் குழவி பிறக்கும்நிலை வரும் என்பதும், உடல் நூல் உண்மை இவையிரண்டன் குறிப்புப்பட இங்குக் கை தோன்றிட என்றும் குடமுடைந்து எழுவாள் என்றும் கூறியருளி கவிநயம் காண்க. இங்குச் சமண் பாட்டுடன் பதிகப் பாட்டான பத்தும் பாடனிரம்பிய பின் குடத்தினின்றும் பாவையாரின் அணியுடைய செங்கை முன் வெளிப்பட்டுத் தோன்றியது. அதன்பின் அக் குடமுழுது முடைந்து அவரது உருவமுற்றும் முறையே எழுந்து தோன்றிற்று என்க.
போற்று - யாவரும் போற்று; துதிக்கும். அதுவரை தன்னகத்துள் வைத்துக் காத்துவந்த என்ற குறிப்புமாம்; இப்பொளில் போற்றுதல் - காத்தல் என உரைக்க.
தாமரைப் போதவிழ்ந்து எழுந்தனள் போன்றாள் - தாமரை குடத்துக்கும், திருபாவையாருக்கும் மெய்பற்றியும், திரு தாமரையிதழ் அவிழ்ந்தெழுதல் பாவையார் குடமுடைந் தெழுதலுக்கு வினைபற்றியும் வந்த உவமங்கள்; இங்குப் பாவையார் முன் உதித்த நிலையினை "மனைவியார் வயிறெனுங் கமலத், துரிய பூமக ளெனவொரு பெண்கொடி யுதித்தாள்" (2938) என்ற கருத்தினையே தொடர்ந்து இம் மறுபிறப்பினும் கூறியதுடன் அதனினும் இதன் உயர்வு புலப்படக் கூறிய நிலையும் கண்டுகொள்க; குடமுடைந்த செயல் சிதைவு காட்டாது போதவிழ்தலைப் போன்றது என்ற மென்மை தோன்று நயமும் காண்க. தாமரைப் போதவிழ்ந் தெழுந்தனள் - திருமகள்; இங்குச் சிவத்திருவினைப் பெறநின்ற மகள் என்பது குறிப்பு. "தேனமர் கோதையுஞ் சிவத்தை மேவினாள்" (3015) என்பது காண்க. தாமரைப் போதவிழ்ந்து எழுந்தனள் - "இதழ்க் கதவந் திறந்தோ?" (திருக்கோவை). எழுந்தனள் - தர்மரையில் முன் எழுந்தனளாகிய திருமகள்; போற்று தாமரை - என்றதனால் அன்பானினைந்து போற்றுமவர்களது உள்ளத்தாமரை தோறும் எழுந்து அருளும் சிவசத்தி என்ற குறிப்பும் காண்க. அவிழ்ந்து - அவிழ; அவிழ்ந்த பின்.
எழுந்தனளை என இரண்டனுருபு விரிக்க. எழுந்தனள் - பெயர்.

1090

2989
எடுத்த பாட்டினில் வடிவுபெற், றிருநான்கு திருப்பாட்
டடுத்த வம்முறை பன்னிரண் டாண்டள வணைந்து,
தொடுத்த வெஞ்சமண் பாட்டினிற் றோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக் காப்புமேல் விரித்தார்.

1091

(இ-ள்.) எடுத்த...பெற்று - மட்டிட்ட என்று தொடங்கிய முதற் பாட்டினில் பாவையார் உருவத்தைப் பெற்று; இருநான்கு...அணைந்து - அதன்மேல் அருளிய எட்டுத் திருப்பாட்டுக்களின் உருவெடுத்த நிலையினையடுத்த அம்முறையே பன்னிரண்டு ஆண்டுகளுக்குள்ள வளர்ச்சியினைப் பொருந்தி; தொடுத்த..தோன்றிட - தொடுத்த