| மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (2) |
| வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகிற் றுளக்கில்கபா லீச்சரத்தான் றொல்கார்த் திகைநாட் டளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (3) |
| ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக் கூர்தருவேல் வல்லார் கொற்றங்கொள் சேரிதனிற் கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான் ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (4) |
| மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலை கைப்பூசு நீற்றான் காபலீச் சரமமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடுந் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (5) |
| மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் அடலானே றூரு மடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (6) |
| மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (7) |
| தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான் கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான் பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள் கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (8) |
| நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும் முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (9) |
| உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டிற் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாத்தி காணாதே போதியோ பூம்பாவாய்! | |
| (10) |