[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 1387 |
|
| மாத்திரமன்றிச் சுற்றிலும் உள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கண்ணியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன. மொத்தம் 806 செய்யுட்கள் கொண்டுள்ளது. | | II | | (திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் ஙி.கி.ஙி.லி. அவர்கள் எழுதியவை) | | திருமயிலையின் பழைமை :- "துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல்மயிலை" என்றார் நம்பியாரூரர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோளநூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. I Chapter 23-ல் ஆசிரியர் H.D. Loveகூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தே. 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256/1912) மயிலாப்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகின்றது. துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேவத்து மக்கள் ஒன்றுகூடுவர். எனவே, டாலமி காலம்முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்தது. போர்த்துக்கேசியர் காலத்திலும் இத்துறைமுகம் சென்னை வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும் கடும்போரும் இருந்துவந்த செய்தி Vestiges of Old Madras Vol. I
என்ற நூலில் நன்கு விளங்கும். பல்லவ மன்னர்கள் காலத்தில் மயிலை சிறந்து விளங்கியபடியால் திருமங்கையாழ்வாழ்வார் திருவல்லிக்கேணியை கூறுமிடத்துத் "தேனமர் சோலை மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி" என்கிறார். கங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது. மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறுபல தலங்களைத் தரிசித்த போது சந்தி விளக்கு நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற சென்ற இடங்களிலெல்லாம் தானம் செய்யக்கூடிய செல்வமும் புண்ணியமும் பெற்றிருந்தனர் என்று ஊகிக்கலாம். அத்தகைய வியாபாரிகளுள் தலையாயவரேபூம்பாவையின் தந்தையாராகிய சிவநேசர். | | மயிலாப்பு என்ற பெயர் :- திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருஒற்றியூர்த் திருத் தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் "வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயிலாப்புள்ளே" என்ற தொடர், சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. "மங்குன் மதிதவழும் மாடவீதி மயிலாப்பி லுள்ளார்" (6-2-1) என்று நாவரசர் மயிலையின் மாடவீதியழகைப் புகழ்கின்றார். "மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்து"ம் என்ற இடத்தில் (6-7-12) மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்தார். இம் மூவிடத்திலும் நாவரசர் மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சிலவற்றுள் மயிலார்ப்பில் என்று ரகர ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912). டாலமியும் மல்லி ஆர்பா - என்பதில் ரகர ஒற்றுடன் கூறுகிறார். பூம்பாவைப் பதிகத்தில் "மடமயிலைக் கட்டுஇட்டம் கொண்டான்" என்பதில் மயிலைக் |
|
|
|
|