[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1389

பூம்பாவைப் பதிகத்தில் காணப்படும் விழாக்களும் விரதங்களும் :- இப்பதிகத்தில் ஒன்பது பாசுரங்களில் இவை கூறப்பட்டுள்ளன. இவற்றுள் கார்த்திகை விளக்கீடு, ஆதிரைநாள், தைப்பூசம், மாசிக் கடலாட்டு, பங்குனி உத்திரம் ஆகிய ஐந்தும், தமிழ் நாடெங்கும் கொண்டாடப் பெறுவதால், மயிலையிலும் விசேடமா யிருந்தன; இன்றும் விசேடமாகவே உள்ளன. ஐப்பசி ஓண விழா ஸ்ரீராமபிரானால் கொண்டாடப்பட்ட செய்தி வடமொழி புராணம் 9-வது அத்தியாயத்தில் 32, 33, 34-வது சுலோகங்களில் கூறப்படுகிறது. ஐப்பசி ஓணத்தில் கொடியேற்றிக் கிருத்திகையில் தீர்த்தம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப் புராணத்தில் ஐப்பசி ஓணத்தைப் பத்தாவது நாள் தீர்த்தமாகக் கொண்டு விழா ஸ்ரீ ராமரால் நடத்தப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இது தவசிரேஷ்டர்கள் அனுபவிக்கக்கூடிய தூய்மையான முறையில் கொண்டாடப்பட்ட சிறப்பைப் புகலியர்கோன் "ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணதே" என்று புகழ்கின்றார். அட்டமி நாள் என்பது சிவ விரதங்கள் எட்டனுள் ஒன்று; வைகாசி மாதம் சுக்கிலபக்ஷம் அஷ்டமியில் அநுஷ்டிக்கப்படுவது (முழுவிவரம் உபதேச காண்டம், சிவவிரத மான்மியச் சருக்கம் 307 - 315 பாடங்களிற் காண்க). இஃதன்றி ஒவ்வொரு மாதம் இரண்டு பக்ஷத்தில் இரண்டு அட்டமி, அமாவசை, பூரணை, ஆதிரை ஆகிய ஐந்துமே, சிவாலயங்களில் பஞ்சபருவ உத்ஸவங்களாயிருந்தன என்பதற்கு (S.I.I. Vol. 7 - No. 541 = A - R 315/1901) என்ற எண்ணுள்ள கல்வெட்டு, பேராதரவு அளிக்கின்றது. இது இவ்வாறாயினும், வைகாசிமாதம் சுக்கிலபக்ஷம் அஷ்டமி நாளையே, "பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்" என்று சம்பந்தர் குறிப்பதாகக் கொள்வதே சிறப்பாகும்.
பொற்றாப்பு :- (பொன் தாம்பு = பொன் ஊசல்) வலித்தல் விகாரத்தால் பாம்பு, பாப்பு என்றாயினாற்போல, தாம்பு தாப்பாகி, பொன்தாப்பு பொற்றாப்பாயிற்று. மார்கழி மாதத்தில் பல சிவாலயங்களில் மூன்று, ஏழு, அல்லது பத்து நாட்கள் ஊஞ்சல் உத்ஸவம் (வடமொழியில் டேரலோத்ஸவம் என்பர்.) நடப்பதுண்டு. பெருமானையும் பிராட்டியையும் ஊசலில் வைத்துப் பொன்னூசல் திருவெம்பாவை முதலிய ஓதுவதுண்டு. சீயத்திற்குச் (Siam) சைவம் சென்றபோது, டோலோத்ஸவமும் திருவெம்பாவைப் பாராயணமும் உடன்சென்றன; இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன. (விவரம் Quaritch Wales எழுதிய Siamese State Ceremonies) என்ற நூலிற் காண்க.
பெருஞ்சாந்தி என்பது ஆவணி அவிட்டம் ஈறாக மூன்று, ஐந்து அல்லது ஏழு நாட்களில், சிவயாகம் முதலிய சிறப்புடன் நடக்கும் பவித்ரோத்ஸவமாகிய சம்வத்ஸர பிராயச்சித்தம். போதிய வருவாயுள்ள சிவாலயங்களிலெல்லாம் இது நடைபெறும்; மயிலையில் மூன்றுநாள் மிகச் சிறப்பாக நடக்கிறது. வருஷம் முழுமையும் நடைபெறும் நித்திய நைமித்திக பூஜைகளில் புத்திபூர்வமாயும், அபுத்திபூர்வகமாயும் ஏற்படும் குற்றங் குறைகளைப் போக்கிப் பரிசுத்தம் காண்பதற்கு ஆகம விதிப்படி அவசியம் செய்ய வேண்டுவது இப்பெருஞ்சாந்தி. கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்கு என்றும் சிலர் இதைக்கருதுவதுண்டு.

வேறு

2990
ஆங்கன மெழுந்து நின்ற வணங்கினை நோக்கு வார்கள்
"ஈங்கிது காணீ" ரென்னா வற்புத மெய்தும் வேலைப்