1390திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பாங்குசூழ் தொண்ட ரானா "ரரகர!" வென்னப் பார்மேல்
ஓங்கிய வோசை யும்பர் நாட்டினை யுற்ற தன்றே.

1092

(இ-ள்.) ஆங்கனம்....வேலை - அவ்வாறு தோன்றி எழுந்து நின்ற தெய்வ நலமுடைய பூம்பாவையாரை நோக்குவார்கள் எல்லாம்; "ஈங்கு இது காணீர்" என்னா - "இங்கு இதனை யாவரும் நன்கு காண்பீர்களாக!" என்று எடுத்துக் கூறி; அற்புதமெய்தும் வேலை - அற்புதமடைந்தபோது; பாங்கு சூழ்....அன்றே - பக்கத்திற் சுற்றும் சூழ்ந்திருந்த திருத்தொண்ட ரானார்கள் அரகர! என்று இவ்வுலகில் முழக்கிய பேரோசை தேவ லோகத்தினையும் சென்று பொருந்தியது அப்போதே.
(வி-ரை.) பாவையார் மீள உற்பவித்தெழுந்த அளவுள்ள வரலாறு முழுமையும் ஐஞ்சீர்க்கலிநிலைத்துறை யாப்பினாற் கூறிவந்த ஆசிரியரது திருவுள்ளக்கிடையினையும், பாவையார், திருவருளால் மீள வெளிப்பட்ட பின்னுள்ள தெய்வ அருள்நலக் காட்சி முதலியனவாய்க் கண்ட கடவுட்டன்மை பற்றிய வரலாறுகளை அதனின் ஒருசீர் மிகுத்து அறுசீர்விருத்த யாப்பினாலருளும் அமைதியினையும் கண்டுகொள்க. பாவையாரின் முன்னுற்பவத்தினும் புனருற்பவமானது சீர்மிகுத்த பண்புடையதென்று யாப்பின் குறிப்பிற் காட்டிய கவிநலமும் கண்டுகொள்க.
அணங்கு - அருளின் தெய்வத்தன்மை வாய்ந்த பெண் என்பது குறிப்பு.
நோக்குவார்கள் - இவர்கள் அங்கு மலிந்து கூடியிருந்த நகரார் நாட்டார் - நன்றியில் சமயத்துள்ளோர் முதலிய உலகியலார்கள்.
ஈங்கியது....அற்புதமெய்தும் - கண்ணினாற் காட்சியிற் காண்பதும் அதனை இன்ன தென்றறியாது மயங்கி நிற்பதுமன்றி இவர்கள் வேறறியுமாற்றலிலர் என்பார் அற்புத மெய்தும் என்றார். "அற்புதம் அறியேனே" (திருவாசகம்).
தொண்டரானோர்.....ஓசை - ஆனால் உலகினர் அவ்வாறு நிற்பத், திருத்தொண்டரானோர் இது சிவபெருமானது பெருங்கருணைத் திறமாகிய திருஅருளின் வெளிப்பாடு என்று கண்டு சிவநாம முழங்கிப் போற்றினர் என்பது.
உம்பர் நாட்டினை உற்றது - இந்நிகழ்ச்சியைக் காண விசும்பிடைத் தேவர்கள் நெருங்கினாராதலின் (2982) அரகர முழக்கம் அவர்பாலும் சென்று பொருந்திற்றென்க.
காணீர் என்ன - என்பதும் பாடம்.

1092

2991
தேவரு முனிவர் தாமுந் திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொண் மாரி பொழிந்தன; ரொழிந்த மண்ணோர்;
யாவரு "மிருந்த வண்ண மெம்பிரான் கருணை" யென்றே
மேவிய கைக ளுச்சி மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.

1093

(இ-ள்.) தேவரும்.....பொழிந்தனர் - (விசும்பிடை நெருங்கிய) தேவர்களும் முனிவர்களும் முதலியோர்கள் சிவபெருமானது திருவருளின் சிறப்பினை நோக்கி மந்தாரம் முதலிய தெய்வ மரங்களின் பூக்களினாலாகிய மணமுடைய பூமழையினைப் பெய்தனர்; ஒழிந்த....வீழ்ந்தார் - முன் கூறியவர்களொழிந்த நிலவுலக மக்கள் எல்லோரும் இவ்வாறு விளைவு பொருந்தியிருந்த வண்ணமானது எமது நாயகராகிய சிவபெருமானது கருணையின் விளைவேயாம்" என்று கூறிப் பொருந்திய கைகளை உச்சி மேற் கூப்பி வணங்கி நிலமுற வீழ்ந்து பணிந்தனர்.