|
| எங்குள....இதென்று - இது அதிசயத்தால் சமணர் நெஞ்சிடங் கொள்ளாது உரைத்த அதிசயக் குறிப்பு மொழி. இச்செயல் வேறெங்கு நிகழும்; எவ்வாறு யார் தாம் இதனைச் செய்ய இயலும் என்றதிசயித்தபடி. இப்பாட்டின் கருத்து, |
| "இன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன் ஒன்றுசொலி மன்றத்து நின்றவரா? -ரின்றியங்கே அங்க முயிர்பெறவே பாடு மடியவரார்? எங்குமிலை கண்டா யிது" | |
| எனத் திருக்களிற்றுப்படியாரில் (65) எடுத்துப் போற்றப்பட்டது. |
| சங்கை - ஐயம்; அச்சம் என்றலுமாம். |
| தள்ளாடி வீழ்தல் - தம்மைத்தாம் தாங்கி நிற்கமுடியாமல் மயங்கி நிலத்தில் வீழ்தல்; சமணரது சமயநிலை வீழ்ந்த குறிப்புமாம்; பிள்ளையாரால் பரசமய நிராகரிப்பு நிகழ்ந்தவாறு காட்டப்பட்டதுமாம். |
| முன் பாட்டினாற் சைவத் திறத்து உள்ளோர்பால் நிகழ்ச்சியும் இப்பாட்டினாற் பரசமயத்துள்ளோர்பால் நிகழ்ச்சியும் கூறப்பட்டன. |
| 1094 |
| பூம்பாவையாரின் தெய்வக் காட்சி நலம்: - |
| இனி, 2993 முதல் 3006 வரை பதினான்கு பாட்டுக்களால் பூம்பாவையாரின் தெய்வீக மறுபிறப்பின் காட்சி நலங்களை ஒவ்வோர் அவயவங்களின் உயரிய இலக்கண அமைதிபற்றி ஆசியர் கண்டு காட்டியருளுகின்றார். "கண்ணுதல் கருணைவெள்ள"மாகவே (3007) பூம்பாவையாரின் றோற்றத்தைப் பிள்ளையார் "ஆயிர முகத்தாற் கண்டார்" (3007) என்று கூறும் ஆசிரியர், அவர் இவ்வாற்றாற் கண்டார் எனத் தாமும் கண்டு காட்டியருளுதல் வேண்டுவது அமைதியாயிற்று; வெறும் மாயா பிண்டங்களாகிய உடலைப்பற்றிப் பெண்களை வருணித்துக் காமச்சுவை பொலியக் கவி பாடுதல் ஏனைப் பசுநூல் கற்கும் புலவர்களிடை மிகுதியும் காணலாம்; பதி புண்யிப் பெருவாழ்வுடையராய்ப் பதிநூல் ஒன்றுமே பாடிய ஆசிரியர் சேக்கிழார்பெருமானது இயல்பும் மரபும் அஃதன்று; சிறுமியரையும் பருவநிறைந்த மகளிரையும் கூறவரும் இடங்களிலெல்லாம் அவ்வச் சரிதநிலை யறிதற்கு வேண்டிய அளவுமட்டும் அணியியலைப் பொதுவகையால் உணர்த்திச் செல்வது மரபாதல் கண்டுகொள்க. மணம் பெறாத மங்கையர்களின் உடல்நல இயல்புகளை மட்டில்லாது வருணித்தல் காமச் சுவையை ஊட்டி மனத்தூய்மையினைக் கேடு செய்தலாகும்; மணம்பெற்ற மாதர்களை அவ்வாறு கூறுதல் "வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்த" தாகித் தகாத செயலாகி முடியும்; "வரமலர் மங்கையிங்கு வந்தன ளென்ன" (279); "மானிளம் பிணையோ" (280); "நாடுமின் பொற்பு வாய்ப்பு நாளுநாள் வளர்ந்து பொங்க" (281); "அள்ளுதற் கமைந்த பொற்பு"(282) "உறுகலின்மெய்ப் புறம்பொலிய...நறு முகைமென் கொடிமருங்கு னளிர்ச்சுருளுந் தளிர்ச்செங்கை, மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்தணைய"(879); "மடக்கொடிதன் மஞ்சுதழைத் தென வலர்ந்த மலர்க்கூந்தற் புறநோக்கி" (894); "அணங்கனைய திலகவதியார்" (1289); "நல்லவென உறுப்புநூ லவருரைக்கு நலநிரம்பி, மல்குபெரு வனப்புமீக் கூறவரு மாட்சியினால், இல்லிகவாப் பருவத்தில்" (1722); "செம்பொன்செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனைபூண் டெய்வப், பைம்பொனின் மாலை வேய்ந்த பவளமென் கொடியொப் பாரை.....யம்பொன்செய் தீப மென்ன வழகலங் கரித்து வைத்தார்" (1321 = புரா - 1223); தேனார் கோதைச் சிங்கடியார்.....மானோர் கோதை வனப் |