[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1393

பகையார்" (3192) "கோவா முத்துஞ் சுரும்பேறாக் கொழுமென் முகையு மனையாரை" (3380 = ஏயர் -புரா - 227) முதலியனவாய் வருமிடங்களிற் கூறும் மரபும், நிலையும் பார்க்க. இனித், "தேனலர் கமலப் போதிற் றிருவினு முருவ மிக்கார்" (364); திருவினும் பெரியாள்" (412);"மன்றலங் குழன்மென் சாயன் மாதேவி" (476); "திருமக ளென்ன நின்ற தேவியார்" (480);பூங்குழலார்" (1730); "மணமலியு மலர்க்கூந்தல் மாதரார்" (1733); "மடநடை மயிலன்னாரைத் தாமரைத் தவிசின் வைகுந் தனித்திரு வென்ன" (1758); முதலியனவாய் வருமிடங்களின் மரபும், நிலையும் கருதுக.
இனி, ஈண்டுப் பாவையாரது முன்னுற்பவத்தில் "பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலா நோக்கிப், பூவி னாளென வருதலிற் பூம்பாவை யென்றே" (2942); "தளரு மின்னினங் குரமென" (2944); "அழகின் முன்னிளம் பதமென வணி விளக்கென்ன" (2945); "அக் கொம்பனா டகைமை யிந்த வையகத் தின்மையால்" (2947) என்றவாற்றால் எடுத்துக் கூறிய இயலும் மரபும் முன்காட்டிய நிலைகள் போன்றே வந்தனவாம்; இவை வேறு; மேலால், இனி, இப் பதினான்கு பாட்டுக்களினும் எடுத்துக் கூறும் மரபும் நிலையும் வேறு; முன்னர்க் கூறிய உடம்பின் நிலை சிவ சங்கற்பத்தின் வழிப் பிரமன் படைப்பினில் வந்தவை; அவை பாச சம்பந்தமாகிய மாயை காரிய உருவத்தைப் பற்றியவை. இனிக் கூறுவன அவ்வாறன்றி சிவ சிருட்டியாகிச் சிவஞானத்தின் ஆணையாற் பாசம் பற்றாது புனருற்பவத்தில் வந்த புனித உருவத்தைப் பற்றுவன. இவை சிவபெருமானது கருணைச் செயலின் விளைவுகளையே காண்வரக் காட்டி நிற்றலால் இவற்றை எத்துணை எடுத்துச் கூறினும் சிவனது கருணையினை அத்துணையும் போற்றுதலேயாம். ஆதலின் பிரமன் தனது படைப்பின் எழிலைக் கண்டவாறன்றிக் கண்ணுதல் கருணை வெள்ளத்தினையே பிள்ளையார் ஆயிரமுகத்தாற் கண்டார் என்று கூறுதல் காண்க. இவ்வாறு முன்னெல்லாம் கூறும் நிலைகளுக்கும் இனி ஈண்டுக் கூறும் நிலைக்கும் உள்ள வேற்றுமையும் உட்கிடையும் உய்த்துணர்ந்துகொள்க. இதுபோல வேறெவ்விடத்தும் கூறாமையும் கருதிக்கொள்க. இப்பாட்டுக்களின் இலக்கியச் சுவையாகிய உவமைநல முதலிய நயங்கள் அவ்வந்நூல்களில் வரும் பெரும் புலவோர்பாற் கேட்டுணரத் தக்கனவாதலின் ஈண்டுப் பொழிப்பாகக் கருத்துரையும், சிற்சில குறிப்புக்களும் மட்டுமே தரப்படுகின்றன. இத்துணையும் ஒரு பொருள் மேலனவாய்த் தொடர்புபற்றி வருதலின் ஒருசேரக் கண்டு உரைக்கப்பட்டன.
குழல்
2993
கன்னிதன் வனப்புத் தன்னைக் கண்களான் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லா மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா மரையினிற் கரிய வண்டு
துன்னிய வொழுங்கு துற்ற சூழல்போ லிருண்டு தோன்ற,

1095

நுதல்
2994
பாங்கணி சுரும்பு மொய்த்த பனிமல ரளகப் பந்தி
தேங்கம ழாரஞ் சேருந் திருநுதல் விளக்க நோக்கிற்
பூங்கொடிக் கழகின் மாரி பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின் வளரொளி வனப்பு வாய்ப்ப,

1096