1394திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

புருவங்கள்
2995
புருவமென் கொடிகள் பண்டு புரமெரித் தவர்த நெற்றி
ஒருவிழி யெரியி னீறா யருள்பெற வுளனாங் காமன்
செருவெழுந் தனுவ தொன்றுஞ் சேமவில் லொன்று மாக
இருபெருஞ் சிலைகண் முன்கொண் டெழுந்தன போல வேர்ப்ப,

1097

கண்கள்
2996
ண்ணிய மணியின் செய்ய வளரொளி மேனி யாடன்
கண்ணிணை வனப்புக் காணிற் காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்திற் றகைவி னீள
ஒண்ணிறக் கரிய செய்ய கயலிரண் டொத்து லாவ;

1098

நாசியும் வாயும்
2997
ணிவள ரல்குற் பாவை நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியிற் றோன்று நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு, மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி யணைவதா மழகு காட்ட;

1099

காது
2998
ளமயி லனைய சாய லேந்திழை குழைகொள் காது
வளமிகு வனப்பி னாலும் வடிந்ததா ளுடைமை யாலும்
கிளரொளி மகர வேறு கெழுமிய தன்மை யாலும்
அளவில்சீ ரனங்கன் வென்றிக் கொடியிரண் டனைய வாக;

1100

கழுத்து - முகம்
2999
விற்பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதன மாகும் பதுமநன் னிதியம் பூத்த
நற்பெரும் பணில மென்னு நன்னிதி போன்று தோன்றி
அற்பொலி கண்டர் தந்த வருட்கடை யாளங் காட்ட;

1101

கைகள்
3000
ரியவிழ் காந்தண் மென்பூத் தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை மாலையோ, தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை கைகளாற் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ வென்னு மதிசயம் வடிவிற் றோன்ற;

1102

கொங்கை
3001
ர்கெழு மார்பிற் பொங்கு மேந்திளங் கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை நீக்குங் கவுணியர் கருணை நோக்கால்
ஆர்திரு வருளிற் பூரித் தடங்கிய வமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டுஞ் செவ்வியிற் றிகழ்ந்து தோன்ற;

1103

உரோமவல்லி
3002
காமவே ளென்னும் வேட னேந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்க டம்மை யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த கலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி மருங்கின்மே லுரோம வல்லி;

1104

அல்குல்
3003
பிணியவிழ் மலர்மென் கூந்தற் பெண்ணமு தனையாள் செம்பொன்
அணிவள ரல்கு றங்க ளரவுசெய் பிழையா லஞ்சி
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை யல்கு லாகிப்
பணியுல காளுஞ் சேடன் பணம்விரித் தடைதல் காட்ட;

1105