|
| துடை - முழந்தாள் |
3004 | வரிமயி லனைய சாயன் மங்கைபொற் குறங்கின் மாமை கரியிளம் பிடிக்கை வென்று கதலிமென் றண்டு காட்டத் தெரிவுறு மவர்க்கு மென்மைச் செழுமுழந் தாளின் செவ்வி புரிவுறு பொற்பந் தென்னப் பொலிந்தொளி விளங்கிப் பொங்க; | |
| 1106 |
| கணைக்கால் - பரடு |
3005 | பூவலர் நறுமென் கூந்தற் பொற்கொடி கணைக்கால் காமன் ஆவநா ழிகையே போலு மழகினின் மேன்மை யெய்த; மேவிய செம்பொற் றட்டின் வனப்பினை மீதிட் டென்றும் ஓவியர்க் கெழுத வொண்ணாப் பரட்டொளி யொளிர்வுற்றோங்க; | |
| 1107 |
| பாதம் |
3006 | கற்பக மீன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப் பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும் நற்பதம் பொலிவு காட்ட; ஞாலமும் விசும்பு மெல்லாம் அற்புத மெய்தத் தோன்றி யழகினுக் கணியாய் நின்றாள். | |
| 1108 |
| குழல் |
| 2993. (இ-ள்.) கன்னிதன்...காணார் - (குடமுடைந் தெழுவாள் போற்று தாமரைப் போதவிழ்ந் தெழுந்தனள் போன்றாளாய் நின்ற) கன்னியாகிய பூம்பாவையாரது அழகு முழுமையினையும் கண்களால் முற்றக் காணாதார்களாகி; முன்னுறக் கண்டார்க்கெல்லாம் - தம் முன்பு கண்கொண்ட அளவே கண்டு அம்மட்டிலடங்கிக் கண்டு கொண்டவர்க்கெல்லாம் தோன்றிய நிலையாவது; மொய் கருங்குழலின் பாரம் - மொய்த்து வளர்ந்த கரிய கூந்தலாகிய சுமை; மன்னிய...தோன்ற - பொருந்திய முகமாகிய செந்தாமரையில் கரிய வண்டுக் கூட்டம் நெருங்கி மெய்த்து வரிசையாய்ச் சூழ்ந்திருந்தாற்போலக் கருநிறமடைந்து காணப்படவும்; |
| 1095 |
| (வி-ரை.) கன்னிதன் - அப்போது மணம்பெறாத நிலை குறிக்கக் கன்னி என்றதுமன்றி, இனிப் பின்னரும் "பாவை தன்மண மேனையோர்க் கிசைகிலேன்" என்று சிவநேசர் அவரைக் கன்னிமாடத்து வைத்தபின் அவ்வாறே அவர் சிவத்தை மேவினகுறிப்பும் காட்டியபடியாம். ஆயுள் முழுதும் கன்னியாக நிற்பவர் என்பார். இங்குத் தொடக்கத்திற் கன்னி என்றார். |
| வனப்புத்தன்னைக் கண்களால் முடியக் காணார் - அழகு முழுமையும் கண்களால் முற்றவும் காண இயலாமையின் முற்படக் கண்ட அளவில்மட்டும் காட்சியின் அமைந்து நின்றனர். அவ்வாறு கண்ட அளவில் மேற்கூறப்படுவதாம் என்க. "முன்னுறக் கண்டார்க் கெல்லாம்" என்ற கருத்துமிது. இக்கருத்தையே விரித்து "தாள் கண்டார் தாளே கண்டார் - தோள் கண்டார் தோளே கண்டார்........" என்ற கம்பன் பாட்டுங் காண்க. |
| குழலின் பாரம் - விரிந்து செறிந்து நிறைந்து குவிதலின் பாரம் என்றார். குழலின் பாரம் - தோன்ற என்க. |
| துன்னிய ஒழுங்குதுற்ற சூழல் - ஒழுங்காக நிறைந்து சூழ்ந்த நிலை. பின்னி முடித்த தோற்றம் வண்டுக் கூட்டம் ஒழுங்குபடச் சுற்றிச் சூழ்ந்தமை. |
| தாமரையினில் - சூழல் - தாமரையில் தேன் உண்ண வண்டுகள் மொய்க்குமியல்பு. தாமரையின் மேல் - என்பதும் பாடம். |