|
| கையும் வாழையின் தண்டும்போலவும், முழந்தாள் பொற்பந்து போலவும் தோன்றவும்; கணைக்கால் காமனது அம்புப் புட்டில்போலவும், பரடு பொற்றராசுத் தட்டுப்போலவும் தோன்றவும்; பாதங்கள் கற்பகத் தருவின் செவ்விய பொன்றிரண்ட வயிரநிரை பூத்த பூந்துணர்போல அழகுகாட்டவும் மூவுலகமும் அதிசயம் பொருந்த அழகுக்கழகாக எழுந்து நின்றாள் என்பதாம். |
3007 | எண்ணிலாண் டெய்தும் வேதாப் படைத்தவளெழிலின்வண்ணம் நண்ணுநான் முகத்தாற் கண்டா; னவளினு நல்லா டன்பாற் புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலி வேந்தர் கண்ணுதல் கருணை வெள்ள மாயிர முகத்தாற் கண்டார். | |
| 1109 |
| (இ-ள்.) எண்ணில் ஆண்டு....கண்டான் - அளவில்லாத ஆண்டுகளைத் தன் ஆயுளாகவுடைய பிரமதேவன் தான் படைத்த திலோத்தமை என்னும் பெண்ணினது அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களாற் கண்டு மகிழ்ந்தான்; அவளினும் நல்லாள் தன்பால் - அவளின் மேலாகிய நன்மைத்தன்மைகள் நன்கு நிரம்பிய பூம்பாவையாரிடமாக; புண்ணியப் பதினாறாண்டு....வேந்தர் - சிவபுண்ணிய விளைவாகிய பதினாறாண்டு அளவுபட்ட பெயரினைப் பெறும் சீகாழித் தலைவராகிய பிள்ளையார்; கண்ணுதல்...கண்டார் - நெற்றிக்கண்ணை யுடையவராகிய சிவபெருமானது கருணைப் பெருக்கினையே ஆயிரமுகங்களாற் காண்பாராயினர். |
| (வி-ரை.) எண்ணில் ஆண்டு எய்தும் வேதா - பிரமதேவனுடைய ஆயுள் எல்லை மனிதவருட அளவால் கணக்கிட்டால் அளவுகடந்த வருடங்களாகும் என்பது; பின்னர்ப் பிள்ளையாரது உலக நிலையின் ஆண்டெல்லையினை மனித வருடத்தால் கணக்கிட்டுக் கூறுதலின், கால அளவுகோல் தூக்கி ஒப்பிடும் பொருளிரண்டனிலும் ஒன்றாக இருத்தல்வேண்டிப் பிரமன் ஆயுள் எல்லையினை மனிதவருடத்தால் அளந்தார். பிரமன் ஆயுளாவது :- மானிடவருடம் ஒன்று தேவர்களுக்கு இரவும் பகலும் கொண்டதொரு நாளாகும்; அந்நாள் முந்நூற்றறுபது கொண்டது தேவ வருடம். எனவே மனித வரும் முந்நூற்றறுபது கொண்டது தேவர்க் கொருவருடமாம். அவ்வாறு தேவ வருடம் 12000 கொண்டது தேவயுகம்; தேவயுகம் இரண்டாயிரம் பிரமனுக்கொருநாளாகும்; இவ்வகை நாட்கணக்கிட்டுச் செல்லும் 100 ஆண்டுகளைத் தன் ஆயுள் எல்லையாகவுடையது பிரமனது ஆயுட்காலம்; இதுபற்றி இவ்வாண்டுகளை மனிதவருடத்தா லளத்தல் எண்ணிறந்த நிலையாதலின் எண்ணிலாண் டெய்தும் வேதா என்றார்; இவ்வாறாகிய ஆயுட்காலம் நிறைவின்போது பிரமன் இறந்துபடும்; "பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போ, யிருங்கடன் மூடி யிறக்கும்" (தேவா - அரசு). |
| புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும் - பிரமனைக் கூறியதுபோல ஆண்டு எய்தும் என்னாது ஆண்டு பேர்பெறும் - என்றார். இறத்தலும் பிறத்தலும் இயல்பாயொழியும் வினைவயத்துளாராகிய பசுவர்க்கத் துட்பட்ட பிரமன் முதலியோர்போலன்றிப், பிள்ளையார் வினைவயத்த ரல்லராகித் திருவடிமறவாப் பான்மையோராய், உலகத்தில் தொண்டினைலை தர வந்தவராய்த், தம்பொருட்டன்றிப் பரசமய நிராகரித்தும் திருநீற்றினை ஆக்கியும் உலகத்தவரை உய்யக்கொள்ள அவதரித்தவராய் நின்ற சீவன் முத்த நிலையினராதலின் இறத்தல் பிறத்தல்களி னுட்படுவாரல்லர். அவர் திறத்துப் பதினாறாண்டு என்பது உலகவர் காணக் காட்டும் ஓர் கால அளவாதலன்றி ஆயுளை நாணாளும் மூப்புச் செய்து "நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும், வாள |