|
| பொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள் சென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர். | |
| 1110 |
| (இ-ள்.) இன்னணம்.....தாதையார் - முன் கூறிய இவ்வாற்றால் விளங்கிய அழகினைக் கொண்ட சாயலையுடைய பூம்பாவையாரைத் தன்முன்னே வெளிப்படக் கண்ணாரக் கண்ட தாதையாராகிய சிவநேசர்; பொன்னணி.....வீழ்ந்தனர் - பொன்னாலணியப்பட்ட மாளிகைகளையுடைய சீகாழித் தலைவரது திருவடிகள் தமது சிரத்திற் பொருந்தும்படி முன்சென்று வீழ்ந்து வணங்கினர். |
| (வி-ரை.) இன்னணம் - முன் 14 பாட்டுக்களில் விரித்தோதியவாறு. |
| ஏர்கொள் சாயலாள் - பூம்பாவையார். ஏர் - அருளின் அழகமைப்பு; சாயல் - மென்மை. ஐம்பொறிகட்கும் விடயமாம் புலன்களைந்தன் மென்மையும் கொள்ளப்படும் (சிந் - உரை). |
| தாதையார் - சிவநேசர்; முன் ஈன்றெடுத்த அம்மரபுபற்றிக் கூறியது. முன் - தாதையார் என்று கூட்டியுரைக்க நின்றதும் குறிப்பாம். இப் புனருற்பவத்தில் உற்பவிப்பித்த தாதையார் பிள்ளையாராவர் என்பது பின்னர் (3012) வரும் வரலாறு. |
| புகலி வேந்தர் - முன் பாட்டிற் கூறிய குறிப்புக்கள் காண்க. |
| தாள் சென்னியிற் பொருந்த - தாடலைபோலத் திருஅடியில் முடி ஒன்றுபட்டுப் பொருந்தும்படி. |
| வீழ்ந்தனர் - அடியற்ற மரம்போலத் தன்முயற்சியின்றி வீழ்ந்தனர். |
| 1110 |
3009 | அணங்கினு மேம்படு மன்ன மன்னவள் பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந் திணங்கிய முகின்மதிற் சண்பை யேந்தலை வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ. | |
| 1111 |
| (இ-ள்.) அணங்கினும்....அன்னவள் - திருமகளினும் மேம்பாடுடையவராய் அன்னம் போன்றவருமாகிய பூம்பாவையார்; பணம்....பணிந்து - படத்தைப் பொருந்திய ஐந்திலைப் பாம்பினை அரையிற் சாத்திய கபாலீசரது முன்னிலையிற் பணிந்து; மண்ணுளோர் தொழ - அதனைக் கண்ட உலகத்தவர் தொழும்பாடியாக; இணங்கிய...நின்றனள் - முகில் பொருந்திய மதிலையுடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையாரை வணங்கியே நின்றனர். |
| (வி-ரை.) அணங்கு - திருமகள்; இலக்குமி. மேம்பாடாவது சிவஞானச் சிருட்டியி னுட்பட்டுச் சிவத்தைச் சாருந்தன்மை பெறுவதனால் அழியாநிலை பெற நிற்றல். |
| அன்னம் அன்னவள் - அன்னம் - ஈண்டு அதன் நடையினைக் குறித்துநின்றது. அன்னநடை போன்ற நடையினை உடையவர். |
| பணம்...பணிந்து - பரமரது கருணை வெள்ளத்தான் மீண்டு வருதலின் அவரை முன்னர்ப் பணிந்தனர்; அன்றியும் இறைவரை முன் வணங்கிப் பின் குருவை வணங்கும் ஓர் முறைபற்றி முன் வணங்கியதுமாம். திருக்கோயில் வாயிலின்முன். |
| பணம்புரி அரவு அரைப் பரமர் - அரவின் விடம் நீங்க அருளிய குறிப்புத் தோன்ற அரவினை இடையிற் கட்டிவைக்கும் இத்திறம்பற்றிக் கூறினார். முன் உற்பவத்தில் எப்போதும் வணங்கப்பெற்ற கபாலீசரை எலும்புருவாய்க் கிடந்த ஐந்தாண்டு |