|
| களும் பணிதலின்றிக் கழிந்தமையால் அவ்வாறு வழிபாடின்றிக் கழிந்தகாலத்திற் கிரங்கிய ஆராமையால் முன்னர்க் கபாலீசரைப் பணிந்தனர். முன் பணிந்து - திருமதிற் புற வாய்தலில் (2978) இறைவரது அபிமுகத்தினில் வைக்கப்பட்ட குடத்தினின்றும் எழுந்து நின்றமையால் அங்குப் பரமர் முன்பு நின்றவாறே (கோயிலினுட் புகாமல்) பணிந்தனர் என்க. |
| சண்பை - சீகாழிப் பதியின் ஒன்பதாவது திருநாமம்; ஏந்தல் - பெருமை - மேம்பாடுடையவர். |
| சண்பை ஏந்தலை வணங்கியே நின்றனள் - பிள்ளையாரது கருணை மெய்த் திருவாக்கினாலே விடநீங்கி யுய்ந்தமை தெரிந்தவர் பாவையார் ஆதலின் அவரை வணங்கினர். அன்றியும் பிள்ளையாரிடத்துத் தம் தந்தையார் கொண்ட ஆர்வமும் வழிபாடும் அறிந்தவாராவர். இனித், தம்மைப் பிள்ளையாருக்கு உரியவராகத் தமது தந்தையார் கொடுத்த (2951) செய்தியறிந்தவராதலின் அவருக்குத் தாம் உரியவர் என்ற நிலையினையும் புந்தியுட் கொண்டவர்; ஆதலின் அவரை வணங்கி நின்றனர். ஆளுடைய அரசுகளால் "தீவிட நீங்க வுய்ந்த திருமறை யவர்தம் சேயும்" (அப்பூதியாரது மூத்த திருமகனார்) விடநீங்கி எழுந்தவுடன் இவ்வாறே அவரது "செய்ய பூவடி வணங்கி"ய நிலை (1818) ஈண்டு நினைவு கூர்தற்பாலது. இங்குப் பாவையார்போல் முன் கூறியவாறு பற்றிய முன்தொடர்புகள் இல்லாமையால், பிள்ளையாரருளால் முயலகனோய் நீங்கப் பெற்ற கொல்லிமழவன் மகள் நோய் நீங்கி எழுந்தவுடன் தனது தாதை புடையடைந்து நின்று பின்னரே தாதையும் தானும் கூட வணங்கினர். "கன்னி யுறுபிணி விட்டு நீங்கக் கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து.....பொருவலித் தாதை யுடையணைந்தாள்" (2217). |
| மண்ணுளோர் தொழ - இவ் வருள்நிகழ்ச்சியினைக் கண்ட உலகர் யாவரும் தொழும்படி. தொழ - நின்றனள் என்க. பின்னே வரும் உலகோர்களும் விழாக் கொண்டாடித் தொழுது உய்யும்படி என்ற குறிப்பும், இன்றும் ஈண்டு இவ்விழா மிகப் பெருஞ் சிறப்பாய்க் கொண்டாடி வழிபடப்பெறுதல் காண்க. |
| 1111 |
3010 | சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர் "ஏர்கெழு சிறப்பினும் மகளைக் கொண்டினிப் பார்கெழு மனையினிற் படர்மி" னென்றலும், | |
| 1112 |
3011 | பெருகிய வருள்பெறும் வணிகர் பிள்ளையார் மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின் "றருமையா லடியனேன் பெற்ற பாவையைத் திருமணம் புணர்ந்தருள் செய்யு" மென்றலும், | |
| 1113 |
3012 | மற்றவர் தமக்குவண் புகலி வாணர் "நீர் பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான் கற்றைவார் சடையவர் கருணை காண்வர உற்பவிப் பித்தலா லுரைத கா"தென, | |
| 1114 |
3013 | வணிகருஞ் சுற்றமு மயங்கிப் பிள்ளையார் அணிமல ரடியில்வீழ்ந் தரற்ற வாங்கவர் | |