[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1413

நாளில் இவ்வொழுக்கத்திற்கு மாறாக ஒழுகுவதன்றி விதி செய்தலும் துணிந்துள்ளார். என்னே! காலக் கொடுமை!
உரை தகாதென்றலால் எண்ணுதலும் தகாதென்பது பெறப்படும்; உற்பவிப்பித்தலால் உரை தகாதென்றமையால் மற்றக் காரணத்தால் இக்காரியம் எண்ணுதலும் தகாதென்றது குறிப்பாம். அக்காரணமாவன பிள்ளையார் திறத்தில் அவரை உலகநிலைபற்றி உழலும் ஏனை ஆன்மாக்களுள் ஒருவராகவைத் தெண்ணுதலும், மணஞ் செய்து வாழ்வு பெற உள்ள நிலையில் வீழ்தற்குரியார் என்று நினைத்தலும் மு தலியன. பின்னர்ப் பிள்ளையாரது திருமணத்தின் வரலாற்றில் திருமணத்தைப் பிள்ளையார் இசையாது நிற்பதும், தாதையாரும் மறையோரும் வேண்டியவா றிசைந்து மணம் நிகழ்ந்தகாலையில் "இந்தவில் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே யிவடன் னோடும், அந்தமில் சிவன்றாள் சேர்வனென்னுமா தரவு பொங்க" என்று மணப் பந்தலிலேயே எண்ணியாங்குச் சிவன்றாள் சேரும் நிலையும் உன்னுக.
காண்வருதல் - விளக்கமாக விளங்குதல்; கைவருதல் என்றலுமாம்.
உற்பவித்தீதலால் - உற்பவித்திடுதலால் - என்பவும் பாடங்கள்.

1114

3013. (வி-ரை.) வணிகரும்....அரற்ற - நெடுநாளாகப் பிள்ளையாருக்கென்று அளித்து வைத்திருந்த பாவையாரை அவர் ஏற்காது நின்றமையின் அவரருளப்பெறாமைக்கு ஏங்கி அரற்றினர்.
துயர் தணிய வேதநூற் றுணிவினை அருள் செய்தார் - நூல்விதி யுணர்ந்து உண்மை தெளிந்தோர் உலகிற் றுயர்ப்பட மாட்டார் என்பது. இங்கு வேதநூற் றுணிபாவன முன் பாட்டில் உரைத்தனவும் பிறவுமாம். பிறவாவன மரபுக்கேலாமையும்; தமது சிவஞானவாழ்வாகிய பெருநிலையினுக் கேலாமையும்; பரசமய நிராகரித்து நீறு ஆக்கும்பொருட்டுத் தரப்பட்டுத் தாம் வந்தமையேயன்றி உலக வாழ்விற்பட் டுழலும் பொருட்டன்றென்ற நிலைக் கேலாமையும் முதலாயினவாம்; வேதியர் ஏனை வருணங்களிலும் மணங்கொள்ளலாமென்பது ஒரு சிறப்பு விதி; அதன் நிலை வேறு. அதனை அவ்வவர் நினைத்த நினைத்தபடியெல்லாம் அலைவதற்குப் பற்றுக்கோடாகக் கொள்ளுதல் சாலாது. பிள்ளையார்போலன்றி, இரண்டு மணங்கள் செய்யநின்ற ஆளுடைய நம்பிகளும் திருநாட்டியத்தான்குடியில் கோட்புலியார், சிவநேசரைப்போலவே, தம் பெண் மக்க ளிருவரையும் ஈந்து ஏற்றுக்கொள்ள வேண்டியபோது அவ்வாறு ஏற்காமல் "இவர் எனக்குத் தூய மக்களாவார்" என்று சொல்லி ஏற்று அவ்வாறே ஒழுகும் வரலாறும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது.
தூய வாய்மையா (ராதலின்) - அருள் செய்தார் - என்று காரணப் பொருள் கொண்டு கூட்டுக.
வாய்மையார் - வாய்மையே தமது செவி - வாய்மையே தமது வாக்கு - அதுவே தமது நோக்கு என்றபடி வாய்மையே தமது முழுவடிவமுமா யமைந்தவர் பிள்ளையார் என்பதாம். "மெய்த்தன்மை விளங்குதிருச் செவி"; "குரும்பையாண் பனையீனு மென்னும் வாய்மை"; "போதியோ வென்னும் அன்ன மெய்த்திரு வாக்கு". தூய - தூய்மைப்படுத்தும் என்றலுமாம்.
வேத நூல் - வேதங்களும், அவற்றின்வழி வரும் மிருதி முதலிய நீதி ஒழுக்க நூல்களும். அவற்றின் துணிபாவன சிவாகம சித்தாந்த உண்மை.

1115

3014
தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்க்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்,