[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1415

மடத்தினின்றும் திருவாலவா யிறைவரை வணங்கி அருட்குறிப்பாகிய திருவுள்ள மறிந்து அருள் பெற்றுப் போந்து, இறுதியில் சமண வாத நிறைவாகிய பின், வைகைக் கரையினின்றும் நேரே திருவாலவாயினுட் சென்றருளிப் போற்றி விடைகொண்டு போந்தருளிய செய்தியும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது (2635 - 2739-ம் 2759-2764-ம் பார்க்க). அங்கு அம்மையார் அமைச்சனார் செயல்கள் வாய்ப்பவும் அமண்பிணி நீங்கவும் மேற்கொண்ட நிலைபோலவே, இங்குச், "சித்த மின்புறு சிவநேசர் தஞ்செயல் வாய்ப்பவும், பொய்த்த வச்சமண் சாக்கியர் புறத்துறை யழியவும், வைத்த வப்பெருங் கருணை" நோக்காகிய நிலையினையே மேற்கொண்டமையும் காண்க.

1116

3015
பான்மையால் வணிகரும் "பாவை தன்மணம்
ஏனையோர்க் கிசைகிலே" னென்று கொண்டுபோய்
வானமர் கன்னிமா டத்து வைத்தனர்
தேனமர் கோதையுஞ் சிவத்தை மேவினாள்.

1117

(இ-ள்.) பான்மையால்....என்று - நியதியின் முறைமையினாலே சிவநேசரும் "பூம்பாவையாரை ஏனையோர் எவர்க்கும் மணம் புணர்வித்தற்கு நான் உடன்படமாட்டேன்" என்று துணிந்து; கொண்டுபோய்.....வைத்தனர் - வானளவுயர்ந்த அவரது கன்னிமாடத்தில் வைத்து ஆங்கு வாழச்செய்தனர்; தேனமர்......மேவினாள் - வண்டு வாழும் மலர்மாலை யணிந்த பாவையாரும் சிவத்தினை அடைந்தனர்.
(வி-ரை.) பான்மை - முன்னை ஊழ்வினையாகிய நியதியின் தன்மை; "அன்பரின்புறு மார்வத்தி னளித்தபாங் கல்லாற், பொன்பி றங்குநீர்ப் புகலிகா வலர்க்கிது பொருந்தா, தென்ப துட்கொண்ட பான்மை" (2954) என்று முன் விளங்கிய பான்மை.
பாவை....இசைகிலேன் என்று - பாவையாரையும் தம்மையும் பிள்ளையாருக்குக் கொடுத்துவிட்டமையால் (2951) பாவையார் பிள்ளையாரது உடைமையாயினர்; அந்நிலையினில் ஒருவர்க்கு ஒப்புவித்த பொருளையே பின்னும் வேறு ஒருவர்க்கு ஆக்குதல் முறையன்று என்பது ஒன்று; சிவநேசர் கருத்துப் பிள்ளையாரையன்றிப் புறத்துச் செல்லாமை மற்றொன்றாம். கொடுப்போர் - கொள்வோர் என்றிருபாலின் ஈண்டுக் கொள்வோராகிய பிள்ளையார்பால் இசைவு நிகழாமையின் சிவநேசர் சொல்லிய மகட்கொடை ஒருபா லிசைவாகவே நின்றது; உலகவியலின் இவ்விசைவு முற்றுப்பேறடையாதென்று அரசநீதி வகுக்கும்; ஆதலின் சிவநேசர் முன்னைநிலையை மாற்றி வேறு செய்யும் உரிமையுடையார் என்று உலகியனீதி கூறும்; அந்நிலையினின்று இங்குச் சிவநேசர் எண்ணி, "உலகவியல் இவ்வாறு வரினும் நான் எனது முன்னே கண்ட நிலையினின்றும் மாறுபடேன்" என்றார்; "மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில், ஊனமில் சீர்ப் பெருவணிகர் குடி" (1717) என்ற இயல்பும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது.
இவ்வாறுயர்ந்த நிலை ஒழுக்கங்களின் மேம்பாடும்; இந்நாள் மணநிலைகள் பற்றி மாக்கள் கொண்டொழுகும் கீழ்மைநெறி ஒழுக்கங்களின் மிகத் தாழ்ந்த குறைபாடும் கண்டு, இவற்றின் உயர்வுதாழ்வுகள் உணர்ந்துகொள்ளத் தக்கன.
கொண்டுபோய்.....வைத்தனர் - கொண்டு போதல் - அழைத்துக் கொண்டு செல்லுதல்; வைத்தல் - அமர்த்தியிருக்கச் செய்தல்; "மகளைக் கொண்டு....மனையிற் படர்மின்" (3010) என்றருளினர் பிள்ளையார்; ஆனால், உயிரைப் பிள்ளையார்பால் ஒப்புவித்த நிலையினையே பின்னரும் மேற்கொண்டு ஏனையோர்க்குப் பாவை