|
| 3017. (வி-ரை.) அமர்ந்தருளும் - விரும்பி வீற்றிருந்தருளும். |
| உலகு முழுதும் தரும் - என்க. எல்லா வுலகும் படைத்தல் முதலிய எல்லா வகையாலும் புரக்கும்; தருதல் - புரத்தல் என்ற பொருளில் வந்தது; புரத்தலாவது படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூவகையாலும் காத்து அருள்புரிதல். |
| முதற்றானம் - முன்மையுள்ள பதிகள். முதன்மையாவது முதல்வன் விளங்க வீற்றிருத்தல். |
| உலகை அழுது வாழ்வித்தார் - தாம் அழுதமையால் உலகின் பொருட்டு ஞானம் பெற்று அதனால் உலகத்தை வாழ்வித்த பிள்ளையார் "வேதநெறி தழைத்தோங்க...அழுத " (1899) என்று தொடக்கத்துக் கூறிய கருத்து. "அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த" (திருப்புகழ்) |
| மருங்கு - மருங்குனின்றும். ஐந்தன் உருபு விரிக்க. |
| 1119 |
| 3018. (வி-ரை.) அங்குள்ளார் - திருமயிலையிற் சிவநேசருடன் வந்து கூடிய பெருந் தொண்டர்களும் (2970), திருவெற்றியூரினின்றும் பிள்ளையாருடன் தொடர்ந்து வந்தார்களும் ஆகிய அங்கே உள்ள திருக்கூட்டத்தினர்; அங்கு நீங்கிப் பிள்ளையார் எழுந்தருளும்போது இவர்கள் அங்குநின்ற வண்ணமே பிள்ளையார்பால் விடைகொண்டு தங்கிவிட்டவர். |
| சிவநேசர்....விடைகொடுத்து - சிவநேசர் பிள்ளையாரைப் பிரிதலாற்றாது பின்றொடர அவரது வருத்தம் நீங்க இன்னுரை கூறி அவருக்குப் பிள்ளையார் தாமே விடைகொடுத்தருளி நிற்கப் பணிந்தருளினர் என்பது விடை கொடுத்து என்றதன் குறிப்பு; திருத்தொண்டர் விடைகொள்ள என்றதும் கருதுக. வருத்தம் - வடிவுதான் காணாராயும் பலகாலம் நினைந்து வழிபட்டு வந்த தியானப் பொருளாகிய பிள்ளையார் நேரே கைவரக் கிடைக்கப் பெற்றபின் அவரைப் பிரியலாற்றாத வருத்தம். மங்கையர்க்கரசியார் - குலச்சிறையார் - நெடுமாறனார் இவர்கள் பிள்ளையாரது பிரிவாற்றாது தொடர்ந்தழுது ஆடி வீழ்ந்தரற்றிய நிலையும் அவர்க்கு இனியவை கூறி நிற்கப்பணித்துப் பிள்ளையார் ஆணைதந்து விடைகொடுத்த நிலையும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன (2792-2793). |
| நிருத்தர் - ஐந்தொழி லருட்கூத்தியற்றும் இறைவர். |
| பிற பதிகள் - திருமலையினின்றும் திருவான்மியூர் செல்லும் வழியில் அருகில் உள்ள பதிகள். மயிலையிலிருந்து வான்மியூர் வழியில் அருகிலுள்ளவை - (1) புலியூர், (புலியூர்கோட்டத் தலைநகர்), கோடன்பாக்கம் வடபழநியாண்டவர் கோயிலுக்கருகில், பழைய சிவாலயம்; கல்வெட்டுக்க ளுண்டு; (2) வெளிச்சேரி; பழைய ஆலயம்; மூலவர் தூபி கருங்கல்லாலாயது; கல்வெட்டுக்கள் உள, (கிண்டி கவர்னர்வீட்டு வேலிக்கெதிரிலுள்ளது.) |
| நிறைகாதல் அருத்தி - அருத்தி - அன்பு; அன்பு காதலாய் விளைந்து நிறைந்த நிலை. |
| 1120 |
| திருவான்மியூர் |
3019 | திருவான்மி யூர்மன்னுந் திருத்தொண்டர் சிறப்பெதிர வழவார்மங் கலவணிகண் மறுகுநிரைத் தெதிர்கொள்ள, அருகாக விழிந்தருளி யவர்வணங்கத் தொழுதன்பு தருவார்தங் கோயின்மணித் தடநெடுங்கோ புரஞ்சார்ந்தார். | |
| 1121 |
| (இ-ள்.) திருவான்மியூர்....அருகாக - திருவான்மியூரின் நிலைபெற்று வாழும் திருத்தொண்டர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வருவார்களாகிய மங்கலம் பொருந்திய |