[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1419

அணிவகைகளைத் தெருவில் வரிசையாக அமைத்து எதிர்கொண்டு தமது அருகே வந்தபோது; இழிந்தருளி - சிவிகையினின்றும் இறங்கியருளி; அவர் வணங்கத்தொழுது - அவர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களைத் தொழுது; அன்பு.....சார்ந்தார் - அன்புதந்து ஆட்கொள்ளும் இறைவரது திருக்கோயிலின் அழகிய பெரிய நீண்ட திருக்கோபுரத்தைச் சார்ந்தருளினர்.
(வி-ரை.) சிறப்பு எதிர வருவார் - சிறப்புடன் எதிர்கொள்ள வருவாராகி; பிள்ளையார் வரும் சிறப்பினை என்றலுமாம். எதிர - எதிர்சென்று ஏற்க; வருவார் - வருவாராகி; முற்றெச்சம். வருவார் - எதிர்கொள்ள - என்று கூட்டுக.
இழிந்தருளி - சிவிகையினின்றும் இழிந்து என்க; சிவிகையினின்றும் என்பது இசையெச்சம்.
அன்பு தருவார் - அன்பினைக் கொடுத்துத் தம்மை வணங்கச்செய்து ஆட்கொள்ளுவது இறைவரது தன்மை.
மணித் தடநெடுங் கோபுரம் - அடைமொழிகள் கோபுரத்தின் மேன்மை குறித்தன. "மிக்குயர்ந்த" என மேற்கூறுதல் காண்க. கோபுரம் - கோபுரத்தை.

1121

3020
மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கிவியன் றிருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப் புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்துங் குளிர்புனலு மொளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார் சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.

1122

(இ-ள்.) மிக்குயர்ந்த...உள்ளணைந்து - மிகவும் உயர்ந்த கோபுரத்தைப் பணிந்து பெரிய திருமுன்றிலினுள்ளே புகுந்தருளிக் கோயிலின் பக்கத்தினைச் சூழ்ந்து வலமாக வந்து உள்ளே அணைந்து; கொக்கிறகும்...தாழ்ந்தார் - கொக்கிறகும் பிறைச்சந்திரனும் குளிர்ந்த கங்கையும் விளங்குகின்ற அந்திமாலையின் செக்கர் போன்ற சடையினையுடைய இறைவரது திருவடிகளின் கீழே விழுந்து வணங்கினார்.
(வி-ரை.) உயர்ந்த - முன் பாட்டிற் கூறிய அடைமொழிகளின் தொகுதியாகிய உயர்வு. உயர்வு - உருவினாலும் திருவினாலும் உள்ள மேம்பாடு.
வியன் திருமுன்றில் - கோயிலினுள்ளே இருக்கும் இடமகன்ற திருமுற்றம்.
கொக்கிறகு....சடை முடியார் - கொக்கிறகு - இறைவர் உகந்து சூடும் இனமலர்; மதிக்கொழுந்து - பிறையின் வளர்ச்சி தொடங்குதலால் கொழுந்தென்றார்; குளிர்புனல் - கங்கைநீர்;செக்கர் - அந்திமாலையிற் காணும் செவ்வானம்; "மாலையின் றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற். அந் - 65).

1122

3021
தாழ்ந்துபல முறைபணிந்து தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தவிசைத் திருப்பதிகச் சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன் சாத்திமிக வின்புற்றார்.

1123

(இ-ள்.) தாழ்ந்து....முன்னின்று - நிலமுற வீழ்ந்து பலமுறையும் பணிந்தெழுந்து இறைவர் திருமுன்பு நின்று; வாழ்ந்து களிவர - வாழ்வு பெற்று மகிழ்ச்சி பொருந்த; பிறவி.....சொன்மாலை - பிறவி நோய்க்கு மருந்தாகிய பெருந்தகைமையுடைய இறைவரை உட்கொண்ட பண்ணமைந்த திருப்பதிகமாகிய சொன்மாலையை;