1420திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

வினாவுரையால்...இன்புற்றார் - வினாவும் உரையுமாக வரும் அமைப்புடனே அழுந்திய பெருவிருப்பினுடன் அணிந்து மிக இன்பமுற்றருளினர்.
(வி-ரை) பிறவி மருந்தான பெருந்தகை - இப்பதியில் இறைவர் மருந்தீசர் என்ற திருப்பெயரோடு எழுந்தருளியிருப்பதனால் அக்குறிப்புப் பெற மருந்தென்பது பிறவிநோய் தீர்க்கும் மருந்தென்று காட்டியருளியவாறு; "மூலநோய் தீர்க்கு முதல்வன் கண்டாய்", "மந்திரமுந் தந்திரமு மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்" (தேவா). தலவிசேடமும், பதிகப் பாட்டுக் குறிப்புக்களும் பார்க்க.
வாழ்ந்து களிவர - திருப்பதிகம் பயின்றொழுகுவோ ரெல்லாம் வாழ்ந்து மகிழ்ச்சியடைய என்ற குறிப்புமாம்.
சூழ்ந்த - பெருந்தகையைச் சூழ்ந்த என்றும், இசை சூழ்ந்த என்றும் இருவழியும் கூட்டியுரைக்க நின்றது; பெருந்தகை - சிவபெருமான்; ஆணவத் தழுந்திப் பிழை செய்வது உயிர்களின் செயல்; அதனைப் பொறுத்துக் கணந்தோறும் அருள்செய்வதே இறைவரியல்பு என்ற குறிப்பு; மருந்தாகி நிற்கும் நிலையினை விரித்தவாறு. "பித்தனேன் பேதையேன் பேயே னாயேன் பிழைத்தனக ளெத்தனையும் பொருத்தா யன்றே, யித்த ணையு மெம்பரமோ?"(தேவா). பெருந்தகையைச் சூழ்தலாவது அவரது அத்தன்மையினையே உட்கிடையாகக் கொண்டு போற்றுதல்; பதிகக் குறிப்புப் பார்க்க. இசை சூழ்தலாவது பண்ணமைதி பாட்டினியல்பிலே பற்றியமைந்து கிடத்தல்.
வினாவுரையால் - வினாவும் உரையுமாக அமைந்த பதிக யாப்பமைதி; பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க.
வீழ்ந்த - வீழ்தல் - அழுந்திய விருப்பம்; விழைவு. "தாம்வீழ்வார்"(குறள்); உலகியற் பொருள்களில் வீழ்ந்து உழலும் விருப்பினை இறைவன்பாலே வீழ்த்தினால் உயிர் உய்தி பெறுமென்பது இச்சொல்லாற்றற் குறிப்பு; "தத்தையங் கனையார் தங்கண்மேல் வைத்த தயாவைநூ றாயிரங் கூறிட், டத்திலங் கொருகூ றுன்கண்வைத்தவருக் கமருல களிக்குநின் பெருமை" (திருவிசைப்பா - 6, கங்கைகொண்ட சோளேச்சரம்).
சாத்தி - சொன்மலை என்றதற்கேற்பச் சாத்தி என்றார்.

1123

3022
ரவிவரு மானந்த நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கண் மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை யணிவான்மி யூரதனுட்
சிரபுரத்துப் புரவலனார் சிலநாளங் கினிதமர்ந்தார்.

1124

(இ-ள்)பரவி வரும்....மிசை விளங்க - பரந்து வருகின்ற ஆனந்தக் கண்ணீர் கண்களினின்றும் துளித்துப் பெருகவும், பொருந்தும் மயிர்ப்புளகங்கள் திருமேனியெங்கும் விளங்கவும் பெற்று நின்று; புறத்து அணைவுற்று - திருக்கோயிலின் புறத்திலே அணைந்தருளி; சிரபுரத்துப் புரவலனார் - சீகாழித் தலைவராகிய பிள்ளையார்; அரவநெடும்...திருவான்மியூரதனுள் - ஓசையினையுடைய நீண்ட அனைகளைக்கொண்ட கடற்கரையில் அமைந்த அழகிய திருவான்மியூரின்கண்; சிலநாளங் கினிதமர்ந்தார் - சில நாள்கள் அங்கு இனிதாக விரும்பி எழுந்தருளி யிருந்தனர்.
(வி-ரை) பரவி வரும் - முன்பாட்டில் இன்புற்றார் என்ற அந்நிலை உள்ளத்திற் பரவுதலினால் வருகின்ற; பரவி - பரவுதலினால் - துதித்தமையால் - என்றுரைக்கவும் நின்றது.