[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1421

ஆனந்த நிறைந்த துளி - ஆனந்தம் நிறைந்ததனால் வரும் கண்ணீர்த் துளிகள். நிறைந்த - நிறைந்ததனால். கண் பனிப்ப - பனித்தல் - துளித்தல்.
மிசை விளங்க - மிசை - திருமேனிமேல். ஆனந்தம் உள்ளேயும், புளகங்கள் மிசையிலும் விளங்கின என்பது.
அரவம் - கடலின் எழும் மாறாதவோசை; நெடுந்திரை - அலைகள் நீண்டும் ஒன்றன்மே லொன்றுமாக இடையறாது பரம்பரையாக வரும் நிலை குறித்தது. "திரையுலாம் கழி" என்ற பதிகமும் காண்க.
அணி - கடற்கரையின் அருகு அழகின் அமைந்த கடற்கரைப் பட்டினங்களுக்குச் சிறப்பாயுரிய அணிநலம்பற்றி அதிபத்த நாயனார் புராணமும், பிறவும் பார்க்க.
சிலநாளங் கினிதமர்ந்தார் - "நளிர்வேலைக் கரையினயந் திருந்தா ரன்றே" (2787) என்று திருஇராமேசுரத்திற் பிள்ளையார் தங்கியிருந்த நிலைபற்றிய குறிப்புக்கள் ஈண்டும் காணத்தக்கன. தரங்கம்பாடி - குமரிமுனை - முதலிய இடங்களுக்கு இந்நாளிலும் மக்கள் உடற்சுகம்பற்றிச் செல்லும் நிலையும் கருதத்தக்கன. ஆயின் ஈண்டுப் பிள்ளையார் இனிதமர்ந்தது அவ்வாறு உலகிய லின்பங்கருதி யன்றென்பது "திருவான்மியூரதனுள்" என்பதனாற் குறிக்கப்பட்டது. "நாதர்தமை நாடோறும் வணங்கி யேத்தி"(2787) என முன்னரும் இக்குறிப்புப் பெற வோதுதல் காண்க. இக்கருத்தினை வற்புறுத்த "மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ், மொய்த யங்குதண் பொழிற்றிரு வான்மியூர் முதலாப், பைத ரும்பணி யணிந்தவர் பதியெனைப் பலவால், நெய்த லெய்தமுன் செய்தவந் நிறைதவஞ் சிறிதோ" (1117) என முன்னர் இறைவரது விளக்கம்பற்றியே ஈண்டு நிலச்சிறப்புக் கூறியவாறும் கருதுக. "பழுதில் புகழ்த் திருமயிலைப் பதியிலமர்ந் தருளுநாள்" (3017) என முன் கூறியது மிக் கருதது. திருப்பதிகத்துக் "கரையுலாங் கடலிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன், றிரையுலாங் கழிமீ னுகளும் திருவான்மியூர்"(1) என்றும், பின்னரும், வரும் திருவுள்ளக் குறிப்பும் கண்டுகொள்க. பதிகத்துள் "கடலின்புறந், தேனயங்கிய பைம்பொழில்சூழ்"(3). "தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த், தெண்டி ரைக்கட லோதமல்கும்" (7), "பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால், திரித ரும்புகழ் செல்வமல்கும்"(9) என்ற பதிகக் கருத்துக்கள் காண்க.
சிரபுரத்துப் புரவலனார் - சிரபுரம் - சீகாழியின் ஏழாவது திருப்பெயர்.

1124

திருவிடைச்சுரம்
3023
ங்கணமர் வாருலகா ளுடையாரை யருந்தமிழின்
பொங்குமிசைப் பதிகங்கள் பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார் பதிபலவுங் கலந்திறைஞ்சிச்,
செங்கண்விடைக் கொடியார்த மிடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.

1125

(இ-ள்) அங்கணமர்வார்....போந்தருளி - அப்பதியில் எழுந்தருளியிருப்பவராகிய பிள்ளையார் உலகங்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரைஅரிய தமிழிலே மேன்மேல் வளரும் பண் இசை நிரம்பிய திருப்பதிகங்கள் பலவற்றாற் றுதிசெய்து அங்கு நின்றும் போந்தருளி; கங்கை..இறைஞ்சி - கங்கைநதியினை அணிந்த அழகிய நடை முடியினையுடைய இறைவரது பதிகள் பலவற்றையும் அங்கங்கும் சென்று கலந்து வணங்கி; செங்கண்விடை...சேர்வுற்றார் - சிவந்த கண்களையுடைய இறைவரது திரு விடைச்சுரத்தைச் சேர்ந்தருளினார் (பிள்ளையார்).