1422திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

(வி-ரை) உலகாளுடையார் - சிவபெருமான்; முழுமுதன்மை யுடையார்; அந்தமாதி என்று ஞானநூல் பேசும் தன்மையினை உடையவர். "உலகாளுடையீர்" (1); "ஆதியெம் பெருமான்"(11) என்ற பதிகக் குறிப்புக்களும் காண்க.
பதிகங்கள் பல - இவற்றுள் "விரையார் கொன்றையினாய்" என்னும் கௌசிகப் பண்ணமைந்த ஒரு பதிகம் மட்டும் கிடைத்துளது; ஏனையவை கிடைத்தில!
பதி பல - இவை குன்றத்தூர், திருநெடுங்குன்றம், திருக்கச்சூ ராலக்கோயில் முதலாயின என்பது கருதப்படும். திருநாவுக்கரசர் புராணத்து 331-ம் பாட்டில் குறித்துள்ளவற்றுள் திருவேற்காடும் திருவலிதாயமும் நீக்கிக் கீழ்வருவனவற்றைச் சேர்த்துக்கொள்க. மாடன்பாக்கம், பல்லவபுரம், திருச்சுரம் (திருசூலம் என வழங்குவது), திருச்சிவப்பேறூர் (குன்றத்தூர் போகும் வழியில் பேரூர் tollgate), கோவூர், மாங்காடு , சோமங்கலம், மணிமங்கலம், படூர், பூஞ்சேரி, திருக்கச்சூர், வயலூர், வீராபுரம். (ஒவ்வொரு ஊரிலும் பழைய கோயிலும் கல்வெட்டுக்களும் உண்டு).
கலந்திறைஞ்சி - திருவொற்றியூரினின்றும் திருமயிலைக்கும், அங்குநின்றும் திருவான்மியூருக்கும் கடற்கரை வழியே அலைவீதியினை அடுத்து எழுந்தருளிய பிள்ளையார், திருவான்மியூரினின்றும் போந்தருளுபவர் கடற்கரையினை விட்டு நாட்டினுள்ளே சென்று பலபுறமும் கலந்து போய் வழிபட்டனர் என்பதாம்.
செங்கண்விடைக் கொடியார் - "விடையுயர் கொடியர்" (5) என்ற பதிகக் குறிப்பு; "கொடியர்" எனச் சிலேடை வகையால் கொடியுடையவர் எனவும், கொடியவர் எனவும் இருபொருள்பட நின்ற பதிகத்துப்போலவே கொடியார் என்ற நயம் காண்க; தலைவனை நயந்த தலைவியின் கூற்றாகிய உட்குறிப்பினையுடைய பதிகக் கருத்துப் பார்க்க. "இரங்கல் நறு செய்தல்" என்ற திணைப் பொருளும் காண்க.
பிள்ளையார் என்ற எழுவாய் முன்பாட்டினின்றும் வருவிக்க.

1125

I திருவான்மியூர்
திருச்சிற்றம்பலம்

வினாவுரை

பண் - இந்தளம்

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

(1)

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- அடியார் சிந்தை செய்து பரவும் திருவான்மியூர் ஆதியெம் பெருமான்! மாதுடனாகிய மாண்பு முதலாகிய உமது முதன்மைத் தன்மைகளின் நிலைகளை எங்களுக்கு உரைத்தருளிச் செய்வீர் என்று இறைவர்பால் வினாவியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) கடல் திரையுலாம் - "அரவ நெடுந்திரை வேலையணி" (3022); உரையுலாம் பொருளாய் உலகாளுடையீர் - சொல்லுவார்