1424திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

II திருவான்மியூர்
திருச்சிற்றம்பலம்

பண் - கௌசிகம்

விரையார் கொன்றையினாய் விட முண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழா யுமை நங்கையொர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திரு வான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா லடை யாதென தரதரவே.

(1)

கன்றா ருங்கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்றா னபுகழால் மிகு ஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திரு வான்மி யூரதன்மேற்
குன்றா தேத்தவல்லார் கொடு வல்வினை போயறுமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - திருவான்மியூருறையும் அரைசே! உன்னையல்லா லடையாது எனது ஆதரவே.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - திரையார் தெண்கடல் சூழ் - "அரவ நெடுந்திரை வேலை" (3024); அரையா - அரசே; "உன்னையல்லா லடை யாதென தாதரவே" என்பது பாட்டுத்தோறும் வரும் மகுடம்; ஆதரவு - அன்பு; அல்லாலடையாது - எதிர்மறைகள் உறுதி குறித்தன; - (2) இடியார் - இடிபோன்ற முழக்கமுடைய; மணிமுடியாய் - மடியிற்சூடும் பணிபோன்றவரே; - (3) செய் - வயல்கள்; - (4) புரிநூல் - புரிந்த முந்நூல்; நூலுடையவனே. தென்பால் - தென்றிசையில்; - (6) நீதீ - ஓதீ - சேதீ - ஆதீ - நான்கும் பெயர்கள்; விளியுருபேற்று நீண்டன. சேதீ - சேதித்தவரே; - (7 - 8) ஆனாய் - எல்லாமானாய்; உரிமையானவரே; இடபம் - பசுபதியே - என்றலுமாம் - (11) இடர் தீர் - மருந்தாய்ப் பிறவிப்பிணி தீர்க்கும்.
தல விசேடம் : - திருவான்மியூர் - III - பக்கம் - 561 பார்க்க.
3024
சென்னியிள மதியணிந்தார் மருவுதிரு விடைச்சுரத்து
மன்னுதிருத் தொண்டர்குழா மெதிர்கொள்ள வந்தருளி
நன்னெடுங்கோ புரமிறைஞ்சி யுள்புகுந்து நற்கோயில்
தன்னைவலங் கொண்டணைந்தார் தம்பிரான் றிருமுன்பு.

1126

(இ-ள்) சென்னி...வந்தருளி - சிரத்திலே இளம்பிறையினைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருவிடைச்சுரத்தில் நிலையாக வாழும் திருத்தொண்டர் கூட்டம் எதிர்கொள்ள வந்தருளி; நன்னெடுங் கோபுரம்... திருமுன்பு - நன்மை தருகின்ற நீண்ட கோபுரத்தினை வணங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்து நன்மை செய்யும் அத்திருக் கோயிலினை வலமாகச் சூழ்ந்து வந்து தமது பெருமான் றிருமுன்பு வந்தணைந்தருளினர் (பிள்ளையார்).
(வி-ரை) நன்னெடும் கோபுரம் - நற்கோயில் - கோபுரம் தூலலிங்கம் எனப்பட்டுத் தூரத்தே காட்சியளித்து அழைத்து வழிபடச் செய்து உய்தி தருதலால் நன்னெடும் என்றார். நற்கோயில் - வந்தடைந்தார்க்கெல்லாம் நன்மை தருவார் எழுந்தருளிய இடமாகிய திருக்கோயில்.
திருமுன்பு அணைந்தார் - என்க. முன்பு; சந்நிதி. சந்நிதியை அடைந்தார் என இரண்டாவதனுருபு விரிக்க.

1126