|
| அளிகள் செந்துருத்தி அறைந்து பயில் - செந்துருத்தி என்பது குறிஞ்சியாழ்த் திறத்தின் பண் வகைகளுள் ஒன்று; இது செந்திறம் எனவும்படும்; செந்துருதி என்றும் சில பதிப்புக்களிற் காணப்படுகின்றது. இப்பண்ணில் ஆளுடைய நம்பிகளருளிய "மீளாவடிமை" என்னும் திருவாரூர்ப் பதிகம் ஒன்றுதான் நமக்குக் கிடைத்துள்ளது! பிள்ளையார் திருப்பதிகங்ளுள் இப்பண்ணில் பதிகம் கிடைத்திலது ! இத்தலத்துப் பிள்ளையாரது "தோடுடையான்" என்ற திருப்பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்துள்ள நிலையும் காண்க; அளிகள் அறைந்து பயில் என்றது வண்டுகளது இரீங்காரத்தில் இயல்பாகவே அவவந் நிலத்திற்கேற்றவாறு சில பண்கள் அமைவன. அவ்வாற்றால் இங்குச் செந்துருத்திப் பண் அமைவதாம் என்க. "சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு, வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடு மிழலை யாமே" (தேவா) முதலியவை காண்க. "கூடல் குறிஞ்சி" என்பவாதலின் இங்கு இன்னிசையாற் றமிழ்பரப்பும் பிள்ளையார் எழுந்தருளுவது கண்டு வண்டுகள் ஏற்றவாறு எதிர்கொள்ளும் குறிப்புடன் அதற்கேற்ற செந்துருத்தி அறைந்தன என்ற குறிப்பும் காண்க. குன்றமாதலின் குறிஞ்சிக்குரிமையுமாம். |
| 1129 |
| திருவிடைச்சுரம் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை |
| வரிவள தவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் கனலெரி யாடுவர் காடரங் காக விரிவளர் தருபொழி லிளமயி லால வெண்ணிறத் தருவிக டிண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சார விடைச்சுர மேவிய விவர்வண மென்னே. | |
| (1) |
| மடைச்சுர மறிவன வாளையுங் கயலு மருவிய வயறனில் வருபுனற் காழிச் சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல் சரிதைகள் பரவிநின்றுருகுசம் புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரற் புணர்மட நடையவர் புடையிடை இடைச்சுர மேத்திய விசையொடுபாட லிவைசொல வல்லவர் பிணியிலர் | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகப் குறிப்பு : - "அணிசார லிருந்த விடைச்சுர மேவிய விவர்வண்ண மென்னே!" என்று இறைவரது வண்ணங் கண்டு அதிசயித்து அவர் சரிதைகள் பரவி நின்றுருகி ஏத்தியது (3025 - 3026). |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) அரையில் அரவு தாழவும் முடியில் மதி சூடியும் கால்வலன் கழல் ஏந்தியும் காடு அரங்காக எரியாடுவர்; இவ்வாறு இடைச்சுரமேவிய இவர் வண்ணம் இருந்தவாறு என்னே! அதிசயம்! என்றவாறு. இவ்வாறே ஏனைய எல்லாப் பாட்டுக்களிலும் கண்டுகொள்க. வரி - வரிகளையுடைய; அவிர் ஒளி - அரவின் ஒளி, உடல் ஒளியும் மணிகளின் உளியுமாம்; கரி - கழல் வலனேந்தி - கரி - கரியாக - சான்றாக. "கள்ளவினை, வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்"(போற்றிப் பஃறொடை - 68); ஆமுலுதல் - அசைதல்; மயில் ஆடுதலுக்கு வழங்கும் மரபுச்சொல்; என்னே! - அதிசயக் குறிப்பு வினா; - (2) ஆற்றை - கங்கையை; உம்மை - உயர்வு சிறப்பு; ஆயிரமா முகத்தினொடு ஆர்த்துப் பரந்திழிந்த ஆற்றையும்; ஏற்றது - உட்கொண்டு அடங்கியது; கொடுமை - வலிமை என்ற பொருளில் வந்தது. ஓர்த்தல் - எண்ணுதல்; செருச் செய - போரிடுதல்போலத் துள்ள; "போர்த் தொழில் புரியும்" (திருவிடை - மும். கோ - 7); மந்தி - பெண்குரங்கு; |