1430திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

செய்பவராகி அங்கு வீற்றிருப்பவர் அவ்விறைவர் என்பது குறிப்பு. காதல் செய் - வந்தடைந்தார்க்குத் தம்பாற் காதலைச் செய்கின்ற என்று பதிகப்பொருள் விரித்தவாறு. "முன்புசெய் தவத்தி னீட்ட முடிவிலா வின்ப மான, அன்பினை யெடுத்துக காட்ட வளவிலா வார்வம் பொங்கி...உள்ளத் தெழுபெருவேட்கை யோடும்"(752); "அண்ணலைப் பிரிய மாட்டா தளவிலா தரவு நீட"(759); "மேவினார் பிரிய மாட்டா விமலனார்"(818) என்று உள்ள கருத்துக்கள் இங்க வைத்துக காணத்தக்கன. காதல் செய் - காதலை விளைத்து நிற்கும்; இதற்கு இவ்வாறன்றி இறைவர் விரும்பும் கழுக்குன்று என்றுரைப்பாருமுண்டு.
காதல் செயும் கோயில் கழுக்குன்று - பதிகத்துள் எல்லாப் பாட்டுக்களிலும் வரும் மகுடமும் பதிகக் கருத்துமாம். இக்காதல் பிள்ளையார் கருத்தினில் மிகுந்து அகலாது நின்றதென்றும், அது அவ்விறைவரது திருவருளால் விளைந்ததென்றும் கொள்க; பதிகம் பார்க்க. செய் என்ற பதிகச் சொற்குச் செய்யும் என்று ஆசிரியர் பொருள் விரித்தலும் குறிக்க.
சிந்தை நிறை மகிழ்வுற்றார் - பெருக்க வளர் காதலினாற் பணிந்து பேராத கருத்தினுடன் பதிகம் புனைந்தருளிய தன்மையினால் மனமகிழ்ச்சி நிறையப் பெற்றனர்.

1131

திருக்கழுக்குன்றம்
திருச்சிற்றம்பலம்

பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை

தோடுடையா னொருகாதிற் றூயகுழை தாழ
ஏடுடை யான்றலை கலனாக விரந்துண்ணும்
நாடுடையா னள்ளிரு ளேம நடமாடுங்
காடுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.

(1)

கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடிய பத்தும் மிவைவல்லார்
புண்ணியராய் விண்ணவ ரோடும் பொலிவாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - கண்ணுதலான் காதல் செயுங் கோயில் கழுக்குன்றே
(11).
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) தோடுடையான்...குழை தாழ - ஒருகாதில் - என்பது இருபாலும் சேர்க்க நின்றது; "ஒருபாற் றோடு மொருபாற் குழையு, மிருபாற் பட்ட மேனி யெந்தை" (கோயினான் - 37); ஏடு - எடு - பகுதி முதனீண்டு வந்த தொழிற்பெயர்; எடுத்தல்; தாங்குதல்; ஏடுடையான் - ஏடுடைய மலரான் - பிரமன் என்றலுமாம். - (2) கேண - கேண்மை கொள்ள; விரும்பிப் பூண; - (4) துணையல் - பூமாலை; யாழ் செய் - யாழிசைபோல முரலும். பிணையல் - "இளங்கொம்ப னாளோ டிணைந்தும் பிணைந்தும்" (தேவா); பிரிக்க வியலாது சேர்தல். கணையல் - கணையினால் அழித்தல்; - (5) மை - விடம்; - (6 - 7) சிறுத்தொண்டர் - அடியார் முன் தம்மைச் சிறியராய் வைத்து அடைந்து ஒழுகும் தொண்டர். உள்ளமெல்லாம் உள்கி நின்றாங்கே உடனாடும், கள்ளம் வல்லான் - "நினைவோரை நினைவானை - நினையாரை நினையா தானை"(தாண்); "சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்"(போதம்); கள்ளம் வல்லான் - தலச்சுவாமி பெயர்களுள் ஒன்று; - (8) அரக்கர்தங் கோனை ஆதல் செய்தான்; அரக்கர்தங் கோனை