[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1431

அருவரையின் நோதல் செய்தான் - என இருவழியும் கூட்டி உரைக்க நின்றது; ஆதல் - தவத்திற்கிரங்கி வரங் கொடுத்து ஆக்கம் தந்தது; - (10) உலகெலாம் சாய நின்றான் - உலகமெல்லா மழிந்த ஊழியிலும் அவற்றைச் சங்கரித்த தான் அழியாது நிற்பவன்; "ஒடுங்கி"; "சங்கார காரணனா யுள்ள முதல்வனையே முதலாகவுடைத்து இவ்வுலகம்" (சிவஞான போதம் - சூத்.1); - (11) கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை - பதிகக் குறிப்பை முடித்துக் காட்டியவாறு.
தலவிசேடம் : - திருக்கழுக்குன்றம் - III - 559 பக்கம் பார்க்க. மலையின் மேலிருந்து வலமாக இறங்குதற்குப் படிவழி தனியாக உள்ளது. மலையின்மேல் சொக்க நாயகி கோயில் தனியாகக் குகை போன்ற இடத்தில் அமைந்து உள்ளது. அடிவாரம் கோயிலினுள் உள்ளது நந்தி தீர்த்தம். மலைவலம் வருவது 2 1/4 நாழிகையளவுள்ளது; அந்தகக் கவி வீரராகவ முதலியார் பாடிய தலபுராணம் உண்டு.
திருஅச்சிறுபாக்கம்
3030
ன்புற்றங் கமர்ந்தருளி யீறில்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினா ரருள்பெற்றுப் போந்தருளி,
என்புற்ற மணிமார்ப ரெல்லையிலா வாட்சிபுரிந்
தன்புற்று மகிழ்ந்ததிரு வச்சிறுபாக் கத்தணைந்தார்.

1132

(இ-ள்) இன்புற்று அங்கு அமர்ந்தருளி - இன்பமுற்று அப்பதியில் விரும்பி எழுந்தருளி யிருந்து; ஈறில்...போந்தருளி - எல்லையில்லாத பெருந் தொண்டர்களுடனே, மின்போன்ற சடையினை யுடையவராகிய இறைவரது திருவருள் விடைபெற்று அங்கு நின்றும் போந்தருளி; என்புற்ற....அணைந்தார் - எலும்புமாலைகளையணிந்த அழகிய மார்பினையுடைய சிவபெருமான் எல்லையில்லாதபடி ஆட்சி புரிந்து அன்பு பொருந்தி மகிழ்ந்து எழுந்தருளிய திருஅச்சிறுபாக்கத்தினை அணைந்தருளினர்.
(வி-ரை) மின் பெற்ற வேணியினார் - முன்னரும் "மின்றயங்குஞ் சடையார்" (3028) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. அருள் - அருள் பொருந்திய விடை.
என்புற்ற மணி மார்பர் - எலும்பு மாலை பூண்ட மார்பினையுடைய இறைவர்.
எல்லையிலா ஆட்சி புரிந்து - ஆட்சிநாதர் என்பது இப்பதியிற் சுவாமி பெயர்; எல்லையிலா ஆட்சி - உயிர்களின் மேல் இறைவரயது ஆட்சி இன்னநாளிற் றொடங்கிற் றென்பதும் இன்னநாளின் முடியுமென்பது மின்றி எல்லாக் காலத்தும் பெத்தமுத்தியிரண்டிலும் எல்லையளவு இன்றியிருத்தல் குறித்து எல்லையிலா ஆட்சி புரிந்து என்றார். "மீளா அடிமை"(தேவா); "என்றுநீ யன்றுநா னின்னடிமை யல்லவோ?" (தாயுமானார்).
அன்புற்றங்கு அமர்ந்த - அன்பு - அருள். அச்சிறுபாக்கத்தில் இறைவர் திரிபுர சங்காரகால முதல் எழுந்தருளியிருத்தல் வரலாறாதலானும், திரிபுர சங்காரமானது உயிர்களின் மும்மலஞ் சிதைந்து ஆளும் கருத்தினை உட்கொண்டமையானும், தேர்மிசை நின்றவாறு ஆட்சிக்குறிப் பாதலானும் எல்லையிலா ஆட்சி புரிந்து அன்புற்றங்கமர்ந்த என்றார்.

1132

3031
ஆதிமுதல் வரைவணங்கி "யாட்சிகொண்டா" ரெனமொழியுங்
கோதிறிருப் பதிகவிசை குலாவியபா டலிற்போற்றி,
மாதவத்து முனிவருடன் வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்மையினார் சின்னாளங் கமர்ந்தருளி,

1133