1432திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

3032
ஏறணிந்த வெல்கொடியா ரினிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்ட ரெதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானங் கடந்தருளி, விரிசடையில்,
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு வரசிலியை வந்தடைந்தார்.

1134

3031. (இ-ள்) ஆதி முதல்வரை வணங்கி - ஆதி முதல்வராகிய இறைவரை வணங்கி; "ஆட்சி கொண்டார்" என....போற்றி - "ஆட்சி கொண்டார்" என்று கூறும் மகுடத்தையுடைய குற்றமில் திருப்பதிகத்தினைப் பண் பொருந்தி விளங்கும் திருப்பாடல்களினாற் றுதித்து; மாதவத்து...இன்புற்று - மாதவமுடைய முனிவர்களுடனே பணிந்து மகிழ்ச்சியடைந்து இன்பமுற்று; தீதகற்றும்...அமர்ந்தருளி - தீமையை நீக்குதலே தமது செய்கையாக வந்தருளிய பிள்ளையார் சிலநாட்கள் அங்கே விருப்பமுடன் எழுந்தருளி யிருந்து;

1133

3032. (இ-ள்) ஏறணிந்த...இறைஞ்சி - இடபத்தைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியினையுடைய இறைவனார் இனிதாக எழுந்தருளிய பதிகள் பிறவற்றையும் திருநீறணிந்த திருத்தொண்டர்கள் அங்கங்கும் வந்து எதிர்கொள்ளச் சென்று வணங்கி; வேறு....கடந்தருளி - மற்றும் பல நதிகளையும் கானங்களையும் கடந்து சென்றருளி; விரிசடையில்...அடைந்தார் - விரித்த சடையில் கங்கையாற்றினை அணிந்த இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருவரசிலிப் பதியினை வந்தடைந்தருளினார்.

1134

இந்த இரண்டு பாட்டுக்களும் ஒருமுடிபு கொண்டன.
3031. (வி-ரை) ஆதி முதல்வர் - ஆதி - "அந்தமாதி" என்றபடி எல்லாவுலகும் தம்மிடத்தின் ஒடுங்கி மீளத் தோற்றுதற்கு நிலைக்களமாக நின்றவர்; முதல்வர் - முதன்மை - இறைமை - யுடையவர்.
"ஆட்சிகொண்டார்" என மொழியும் - "ஆட்சி கொண்டாரே" எனப் பாட்டுத்தோறும் கடைமுடியும் பதிகத்தின் மகுடத்தைக் குறித்தது. கோதில் - கோது - குற்றம்; உயிர்களுக்குள்ள மலமாசினை இல்லையாகச் செய்யும். இசை - பதிகப்பண்ணாகிய குறிஞ்சிப் பண்ணின் இசை. குலாவிய பாடல் - குறிஞ்சிப்பண்ணின் கட்டளை பேதங்கள் பலவற்றினும் அதன் இசைத்தன்மை பெரிதும் விளங்கும் முதற்பெருங் கட்டளையின் பாடல்; பதிகம் பார்க்க. குறிஞ்சிப் பண்ணில் இப்போது ஐந்து கட்டளைகளையுடைய பதிகங்கள் கிடைத்துள்ளன.
மாதவத்து முனிவர் - சிவனடியார்கள்; திருத்தொண்டர்கள். சிவபூசையே மாதவமெனப்படும். "தவமுயல்வோர் மலர்பறிப்ப" (தேவா).
தீதற்றும் செய்கையினார் - மக்களை மயக்கிநின்ற பரசமயங்களை நிராகரிக்கவும், திநீற்றினை ஆக்கங் காணவுமே அவதரித்து அச்செயல்களையே செய்தருளும் பிள்ளையார்; "தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்" (3151) என்று இப்புராண நிறைவிற் கூறியருளுதல் காண்க.
அமர்ந்தருளி - இறைஞ்சி - கடந்தருளி - அடைந்தார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

1133

3032. (வி-ரை) ஏறு - இடபக்குறி - இலச்சினை - உருவம்.
பதி பிற - இவை பெரும்பேறு, திருநற்குன்றம், உலகூர், உலகாபுரம், கந்தாடு, கிடங்கில், கிளியனூர், தேவனூர், திண்டீச்சுரம், பேராவூர், மரக்காணம், முன்னூர் முதலாயின என்பது கருதப்படும்; ஒவ்வொன்றிலும் பழைய கோயில்களும் கல்வெட்டுக்