[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1433

களும் உண்டு. அச்சிறுபாக்கத்தினின்றும் தென்மேற்கில் திண்டிவனம் (திண்டீச்சுரம்) கற்சாலை வழியாய் 17 நாழிகையளவில் அடையத்தக்கது. அங்குநின்றும் தென்கிழக்கில் புதுச்சேரி செல்லும் கற்சாலையில் 15 நாழிகையளவில் உள்ளது அரசிலி. இவ்வழியன்றித் திண்டிவனத்தினின்றும் கிழக்கில் பிரமதேசம் மரக்காணம் சென்று தெற்கில் திரும்பிப் புதுச்சேரி செல்லும் ஒரு கற்சாலை வழியுமுண்டு. இதன் வழியே திருநற்குன்றம், பெருமுக்கல் மலை, பேராவூர் என்றிவற்றை அடையலாம். பிள்ளையார் சென்ற வழி பின்கூறியது போலும் என்பது குருதப்படும். ஆயின் முன்கூறிய வழியாலும் இவற்றை அடைந்து செல்லலாம். தொண்டருடன் - என்றதும் பாடம்.
வேறு பல நதி கானம் கடந்தருளி - நதிகளும் கானங்களும் என்க. வேறு - என்பது இறைவர் விளங்கும் பதிகள் அமையாத என்ற குறிப்புப் பெற நின்றது. இவை வராக நதியின் கால்களும் பெருமுக்கல்மலைப் பிரதேசத்த்னின்றும் வரும் காட்டாறுகளும், காவேரி ஏரி - மரக்காணம் ஏரி இவற்றில் சேரும் சம்பந்தமுடையனவுமாகிய நதிகளும், அந்த மலைநிலப் பரப்பில் அமைந்த சிறு கானங்களுமாம்.

1134

திருஅச்சிறுபாக்கம்
திருச்சிற்றம்பலம்

பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை

பொன்றிரண் டன்ன புரிசடை புரளப் பொருகடற் பவளமோ டழனிறம்புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி
யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை மெல்லிய லாளையோர் பாகமாப்பேணி
யன்றிரண் டுருவ மாயவெம் மடிக ளச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

(1)

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர்
கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடைஞானசம் பந்தன
தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்து மன்புடை யடியவ ரருவினை யிலரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - இறைவர் திருஅச்சிறுபாக்கத்து எல்லையிலா ஆட்சி புரிந்தன்புற்று மகிழ்ந்து எழுந்தருளியுள்ளார் (3030 பார்க்க).

பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) பவளமோடு அழல்நிறம் புரைய - பவளமும் அழலும் தமது நிறத்தினை நிகர்க்க; கொழும் பொடி - திருநீறு; ஓர் பாகமாப் பேணி அன்றிரண் டுருவமாய - சங்காரத்தில் உலகங்களையெல்லாம் தம்முள் அடக்கி ஒன்றாய் நின்ற சிவம், புனருற்பவத்தின் பொருட்டுச் சத்தியைச் சங்கற்பித்துப் பின் சிவம் சத்தி என இரண்டுருவாகிய என்ற சிருட்டித் தொடக்கநிலை கூறியவாறு; இங்குத் திரிபுரமெரிக்கத் தேர்மிசை நின்ற வரலாற்றினாற் சங்காரமும், எல்லையிலா ஆட்சி புரிந்து அன்புற்று மகிழ்ந்திருந்தமையால் மறுசிருட்டியும் குறிப்பிற் பெறவைத்துக் கூறியருளியமை கண்டுகொள்க; ஆட்சி கொண்டார் - தலத்தின் இறைவர் பெயராகும்; - (2) ஊன் நயந்துருக - உருகியபோது என்றும், உருகும்படி என்றும் உரைக்க நின்றது; உச்சிமேல் உறைபவர் - பிரமரந்திர மென்னும் 1000 இதழ்த் தாமரையில் வீற்றிருப்பவர். "என்னிடைக் கமல மூன்றினுட் டோன்றி யெழுஞ்செழுஞ் சுடரினை" (மசேந்தனார் திருவிசைப்பா - திருவீழி - 4); "என்றலையி னுச்சி யென்றுந் தாபித் திருந்தானை"(தேவா - அரசு - தாண் - திருவால - 10); ஒன்று - விடை; - (3) பிறவியிற் சேரார் - "ஒன்றென்ற தொன்றேகாண்"(போதம்) என்ற பதிப்