[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1437

களும் உதயத்தில் சூரியபூசை நிகழ்வது இன்றும் காணலாம்; அந்நாட்களில் முதலில் சூரியனது கதிர்கள் முன்னர்ச் சுவாமிமேலும், பின்னர் அம்மையாரின்மேலும் தீண்டி வழிபடுதல் நேரே காணத்தக்கது; அந்நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சுவாமி - பனங்காட்டீசுவரர்; அம்மை - புறவம்மை; மரம் - பனை; பதிகம் 1. புறவின் பொருட்டுத் தசையரிந்த சிபிக்கு அருளியமையாலும் பனை தலமரமாதலாலும் இப்பதிக்கு இப்பெயர் போந்தது.
இது விழுப்புரத்தை யடுத்த முண்டியம்பாக்கம் நிலையத்தினின்றும் வடகிழக்கில் மட்சாலைவழி 2 நாழிகையளவில் திண்டிவனம் பாதையில் 1 நாழிகை சென்று பின்பு கிழக்கே 1 நாழிகையில் அடையத்தக்கது. விழுப்புரங்ததினின்றும் வடக்கில் 5 1/2 நாழிகையில் உள்ளது.
3034
எல்லையில்ஞா னத்தலைவ ரெழுந்தருள வெதிர்கொள்வார்
தில்லையில்வா ழந்தணர்மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கியெதிர் பணிந்திறைஞ்ச மணிமுத்தின் சிவிகையிழிந்
தல்குபெருங் காதலுட னஞ்சலிகொண்ட டணைகின்றார்;

1136

தில்லை... 3-ம் முறை
திருவெல்லை யினைப்பணிந்து சென்றணைவார் சேண்விசும்பை
மருவிவிளங் கொளிதழைக்கும் வடதிசைவா யிலைவணங்கி
உருகுபெருங் காதலுட னுட்புகுந்து மறையினொலி
பெருகிவளர் மணிமாடப் பெருந்திருவீ தியையணைந்தார்.

1137

3034. (இ-ள்) எல்லையில்...எழுந்தருள - அளவுபடாத சிவஞானத் தலைவராகிய பிள்ளையார் எழுந்தருள (அது தெரிந்து); எதிர்கொள்வார்...பணிந்திறைஞ்ச - அவரை எதிர்கொள்வார்களாகித் தில்லைவாழ்ந்தணர்களும் திருத்தொண்டர்களும் சிறப்புக்களுடனே நெருங்கிக் கூடிப்போந்து பணிந்து வணங்க; மணிமுத்தின்...அணைகின்றார் - அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிப் பெருங் காதலுடனே அஞ்சலி செய்துகொண்டு பிள்ளையார் அணைகின்றவராய்;

1136

3035. (இ-ள்) திருவெல்லையினை...அணைவார் - திருஎல்லை யினைப் பணிந்து மேற்சென் றணைவாராகி; சேண்...வணங்கி - நீண்ட ஆகாயத்தைப் பொருந்தி விளங்கும் ஒளி பெருகுகின்ற வடதிசைத் திருவாயிலினை வணங்கி; உருகு...அணைந்தார் - மனமுருகும் பெருங் காதலுடனே திருநகரத்தின் உள்ளே புகுந்து வேதங்களின் ஒலி பெருகி வளர்தற்கிடமாகிய அழகிய மாடங்கள் நிறைந்த பெருந் திருவீதியினை அணைந்தருளினர்.

1137

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3034. (வி-ரை) எல்லையில் - திருஎல்லையில் என்ற குறிப்புமாம். எதிர்கொள்வார் - எதிர்கெபாள்வார்களாகி - முற்றெச்சம்; எதிர்கொள்வார் - மல்கி - இறைஞ்ச என்று கூட்டுக.
தில்லை வாழந்தணர் - மெய்த்திருத் தொண்டர் - எண்ணும்மைகள் விரிக்க. இறைவருடனே மூவாயிரவர்களாதலின் தில்லைவாழந்தணர் முன் வைக்கப்பட்டனர்; முன்னரும் "தில்லை வா ழந்தண ரன்பர்க ளுடனீண்டி" (2052) என்றது காண்க.
சிறப்பினொடு - சிறப்பு - எதிர்கொள்ளுதற்குரிய நிறைகுட முதலிய மங்கலப் பொருள்கள் (2053).