1438திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பணிந்திறைஞ்ச - அஞ்சலி கொண்டு - முன்னர் (2053) விரித்துக் கூறினாராதலின் இங்குச் சுருக்கிக் காட்டியருளினார்.
அஞ்சலி கொண்டு - கரங்களைக் கூப்பி வணங்கிய நிலையினை மேற்கொண்டு.
அணைகின்றார் - பிள்ளையார் என்ற எழுவாய் தொக்கு நின்றது. அணைவாராகி - முற்றெச்சம்; அணைகின்றார் - பணிந்து - அணைவார் - வணங்கி - புகுந்து - அணைந்தார் என மேல்வரும் பாட்டினுடன் முடிக்க.
மணிமுத்தின் சிவிகை - மணி - அழகு; மணிகளுட் சிறந்த என்றலுமாம்.
3035. (வி-ரை) திருஎல்லை - வடக்குத் திருஎல்லை. இது தில்லையின்வடக்கில் 4 நாழிகையளவில் உள்ள நிவா நதிக்கரையில் உள்ள திருவடையாளம். தெற்குத் திருவெல்லை கொள்ளிடக் கரையும், மேற்குத் திருவெல்லை வாய்க்காலும், கிழக்குத்ா திருவெல்லை கடற்கரையும் போல.
சேண் விசும்பை....வடதிசை வாயிலை வணங்கி - தில்லைத் திருநகருக்கு நான்கு திசையிலும் திருவாயில்கள் உள்ளமையாலும் பிள்ளையார் இப்போது வடக்கினின்றும் போந்தருளுகின்றமையாலும் வடக்கு வாயிலை வணங்கி உட்சென்றருளினர். இது நகர்த் திருமதில் வடக்கு வாயில். சீகாழியினின்றும் முதன்முறை போந்தருளியபோது தென்றிசையிலிருந்து வந்தருளினாராதலின் "தில்லைசூழ் நெடுமதிற்றென் றிருவாயி னேரணித்தாக" (2051) என்றது காண்க.
இது பிள்ளையார் திருத்தில்லையை வழிபட்ட மூன்றாவது முறை; தொண்டை நாடு வணங்கச் சென்ற இந்த யாத்திரைத் தொடக்கத்தில் திருத்தில்லையினை வழிபட்டுப் போந்தருளியது இரண்டாவது முறையாகும் (2680).
சேண் - நீண்ட தூரத்துள்ள; ஒளி தழைத்தல் - சிவவொளி பெருக வீசுதல். இத்திருவாயில் ஆளுடைய நம்பிகள் முதன்முறை திருத்தில்லைக்குள் எழுந்தருளும் திருவாயில் என்பது "வாயில்க ணான்கி னுத்த ரத்திசை வாயின்மு னெய்தி" (243) என்பதனாலறியப்படும். உட்புகுந்து - தில்லைத் திருநகரத்தினுள்ளே புகுந்து.
மாடப் பெருந் திருவீதி - தேர்வீதி; மாடவீதி. இங்குக் குறித்தது வடக்கு மாடவீதி.
மறையினொலி பெருகி வளர் - தில்லைவா ழந்தணர்களின் திருமாளிகைகள் பெருகி வளர்தல் அவர்களது மனைகள்தோறும் வேதம் பயிலும் ஒலி பெருகி வளர்கின்றதென்பது. வளர் - என்றது மேன்மேலும் மறைச்சிறுவர் பயில வளர்தலும் குறித்தது.
நெடுமாடம் - என்பதும் பாடம்.

1137

3036
நலமலியுந் திருவீதி பணிந்தெழுந்து நற்றவர்தங்
குலநிறைந்த திருவாயில் குவித்தமலர்ச் செங்கையொடு
தலமுறமுன் றாழ்ந்தெய்தித் தமனியமா ளிகைமருங்கு
வமலமுறவந் தோங்கியபே ரம்பலத்தை வணங்கினார்.

1138

(இ-ள்) நலமலியும்...எழுந்து - நன்மை மிகவும் செய்கின்ற திருவீதியினை நிலமுறைப் பணிந்து எழுந்து; நற்றவர்தம்...தாழ்ந்தெய்தி - நற்றவர்களது கூட்டம் நிறைந்த திருவாயிலினைச் செங்கைகளைச் சிரமேற் கூப்பிக்கொண்டு நிலம் பொருந்த முன்னே தாழ்ந்து வணங்கிச் சென்று சேர்ந்து; தமனிய...வணங்கினார் - பொன் மாளிகையாகிய திருவம்பலத்தின் பக்கத்தே வலமாக வந்து உயர்ந்த பேரம்பலத்தை வணங்கினார்.