[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1443

ரும் பிள்ளையாரது திருமணத்தில் இறைவனடி பொருந்தும் திருவினை யெய்தும் நிலைக்குரிய தன்மைகளை வளர்க்கும் என்ற குறிப்பும் தந்துநிற்றல் காண்க.
மாதவர் - சிவனடியார்கள். சிவபூசையே தவம் எனப்படும். மாதவமாவது சைவத்தின் நால்வகை நெறிகளிலும் சிறந்து உறைப்புடன் ஒழுகுதல். "ஆறுவகைச் சமயத்தி லருந்தவரும்" (3150) "அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ்சாரு, நெறிவழி நின்ற வேட நீடிய தவத்தி னுள்ளோர்" (3101) என்பவை முதலியன காண்க. சிறப்புப்பற்றி "மாதவர்" பின்வைத் தோதப்பெற்றனர்.

பெருந்திருமா லயன் போற்றும் - "வரங்கிடந் தான்றில்லை யம்பல முன்றிலம் மாயவனே"(திருக்கோவையார்).

பெரும்பற்றப் புலியூர் - முனிவர் - தேவர் முதலிய எல்லாருக்கும் பெரும்பற்றாக உள்ள ஊர் என்பது; "பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" (பிள்ளையார்).
தமிழாகரர் - ஆகரம் - இடம்.
கேட்டு வந்தணைந்தார் - தொண்டை நாடு சென்று வணங்கித் திரும்பியருளித் தில்லையில் எய்திய பிள்ளையார், சீகாழியில் அணிமையில் எழுந்தருள்வார் என்பது தெரிந்தாரேனும், அதுவரையும் பிள்ளையாரைக் காணாது தரிக்கலாற்றாது எதிர்கொண்டு போந்தனர் என்க. இவர்களது, பிள்ளையாரைப் பிரியலாற்றாத நிலை முன்னர்த் திருவீழிமிழலையிற் சென்று கண்டு அவரைச் சீகாழிக்கு வரும்படி வேண்டியமையாலும், தாதையார் பிள்ளையாரைக் காணத் திருவாலவாயினிற் சென்றமையாலும் அறியப்படும். தாமும் திருத்தில்லை சென்று வணங்கிப் பிள்ளையாருடன் அம்பலக்கூத்தரை வணங்கும் (3041 பார்க்க) ஆசையும் துணை செய்ததென்க. "கோவே யுன்றன்கூத்துக் காணக் கூடுவ தென்றுகொலோ" (1) ; "அத்தா வுன்ற னாடல் காண வணைவது மென்று கொலோ" (3) (கண்டராதித்தர் - கோயில்); "எம்மிறையை யென்றுகொல் காண்பதுவே" (திருவாலியமுதனார்); "அப்பா காண வாசைப் பட்டேன் கண்டா யம்மானே" (திருவா) என்பன முதலிய திருவாக்குக்கள் உண்மையடியார்களின் உண்மை நிலையை விளக்குதல் காண்க.

1142

3041
ங்கவரைக் கண்டுசிறப் பளித்தருளி யவரோடுந்
தாங்கரிய காதலினாற் றம்பெருமான் கழல்வணங்க
ஓங்குதிருத் தில்லைவா ழந்தணரு முடனாகத்
தேங்கமழ்கொன் றைச்சடையார் திருச்சிற்றம் பலம்பணிந்தார்.

1143

(இ-ள்) ஆங்கு....அளித்தருளி - அவ்வாறு வந்தணைந்த அவர்களைக் கண்டு அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் இனிய மொழிகள் கூறி; அவரோடும்...வணங்க- அவர்களுடனேகூடத் தரிக்கலாற்றாத பெருவிருப்பத்தினாலே தமது பெருமானது கழல்களை வணங்குதற்கு; ஓங்கு....உடனாக - திருமிக்க தில்லைவாழந்தணர்களும் உடனாக வரச் சென்று; தேங்கமழ்...பணிந்தார் - தேன் மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடிய சடையினையுடைய இறைவரது திருச்சிற்றம்பலத்தினைப் பணிந்தனர்.
(வி-ரை) ஆங்கு அவரை - ஆங்கு - அவ்வாறு வந்த அவர்களை; அவ்விடத்து என்றலுமாம்.
சிறப்பு அருளி - சிறப்பாவது அவர்களை முகமன்கூறி வரவேற்று நலம் அருளுதல் என்ற பொருளில் வந்தது.