1444திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

அவரோடும் - வணங்க - தில்லைவா ழந்தணரும் - உடனாக - அவர்களுடன் கூடிச் சென்ற வணங்குதற்குத் தில்லைவாழந்தணரும் - உடன்ஆதி வர - ஒன்றுகூடி வரக் - கூடிப் பணிந்தார் என்க. கூடி என ஒருசொல் வருவித்துரைக்க.
தாங்கரிய காதலினால் - புலியந்தணர்களும் அடியவரும் உடனாதத் திருமன்று பணியப்பெற்றதனால் பெருவிருப்பு மிக்கதென்பது.
திருஓங்கு என்க; திரு - வைதிக சைவத் திரு.
திருச்சிற்றம்பலம் - ஞானாகாயமாகிய பொன்னம்பலம்.

1143

3042
தென்புகலி யந்தணருந் தில்லைவா ழந்தணரும்
அன்புநெறி பெருகுவித்த வாண்டகையா ரடிபோற்றிப்
பொன்புரிசெஞ் சடைக்கூத்த ரருள்பெற்றுப் போந்தருளி
யின்புறுதோ ணியிலமர்ந்தார் தமைவணங்க வெழுந்தருள,

1144

3043
ற்றவர்தங் குழாத்தோடு நம்பர்திரு நடஞ்செய்யும்
பொற்பதியின் றிருவெல்லை பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றமுயர்த் தவரமர்ந்த பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக் கழுமலமே சென்றடைவார்,

1145

3044
ல்பதிகள் கடந்தருளிப் பன்னிரண்டு பேர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின் சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேற் றிருப்பதிக மருள்செய்வார்,

1146

3045
மன்னுமிசை மொழி "வண்டார் குழலரிவை" யென்றெடுத்து
மின்னுசுடர் மாளிகை"விண் டாங்குவபோல் வேணுபுரம்"
என்னுமிசைச் சொன்மாலை யெடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப் புறம்பணையில் வந்தணைந்தார்.

1147

3042. (இ-ள்) தென்புகலி...போற்றி - அழகிய சீகாழி மறையோரும் தில்லை வாழந்தணர்களும் அன்புநெறியைப் பெருகச்செய்த இறைவரது திருவடிகளைப் போற்றி; பொன்புரி...போந்தருளி - பொன்போன்ற புரித்த சடையினையுடைய கூத்தப்பெருமானது திருவருள் விடைபெற்றுப் போந்தருளி; இன்புறு...எழுந்தருள - இன்பஞ் செய்யும் திருத்தோணியில் விரும்பி வீற்றிருந்த இறைவரை வணங்குதற்கு எழுந்தருளுவதன் பொருட்டு;

1144

3043. (இ-ள்) நற்றவர்தம்...புறம்போந்து - நல்ல தவமுடைய அடியார் .கூட்டத்துடனே கூடி, இறைவர் திருநடனம் செய்தருளுகின்ற அந்த அழகிய பதியன் திருவெல்லையினைப் பணிந்தருளிப் புறத்திற் போய்; பெற்றம்...இறைஞ்சி - விடைக் கொடியினை உயர்த்திப் பிடித்த இறைவர் விரும்பி எழுந்தருளிய பிற பதிகளையும் சென்று வணங்கி; கற்றவர்கள்... அடைவார் - கற்ற பெரியோர்கள் துதிக்கின்ற சீகாழிப் பதியினையே சென்று சேர்வாராகி;

1145

3044. (இ-ள்) பல்பதிகள் கடந்தருளி - பல பதிகளையும் கடந்து சென்றருளி; பன்னிரண்டு...எதிர் வணங்கி - பன்னிரண்டு பெயர்களையுடைய பழைமையாகிய வளம் பொருந்திய சீகாழிப் பதியானது தூரத்திலே காட்சிப்படுதலும் பொருந்திய திருமுத்துச் சிவிகையினின்றும் இறங்கி வணங்கி; செல்வமிகு..செய்வார் - சிவச்