|
| புறம்பணை - நகரின் புறத்து வயல்கள்; புன்னைமணங் கமழ் புறவம் - நெய்தனிலச் சார்புபற்றிக் கூறியவாறு. இதுபற்றியே திருக்கழுமல மும்மணிக்கோவையினுள் பட்டினத்துப் பெருமானார் நெய்தற்றிணைக்குரிய இரங்கற்றுறையில் வைத்துப் பற்பல பாட்டுக்களும் அருளியவாறு கண்டுகொள்க. |
| எழுந்தருளி - தூரத்தே தோன்றிய உடத்தினின்றும் மேற்சென்று நகரணிமைக்குச் செல்ல. |
| 1147 |
3046 | வாழிவளர் புறம்பணையின் மருங்கணைந்து, வரிவண்டு குழுமலர் நறுந்தீப தூபங்க ளுடன்றொழுது "காழிநகர் சேர்மி"னெனக் கடைமுடிந்த திருப்பதிகம் ஏழிசையி னுடன்பாடி யெயின்மூதூ ருட்புகுந்தார். | |
| 1148 |
| (இ-ள்) வாழிவளர்...மருங்கணைந்து - வாழ்வாக வளரும் அத்திருப்பதியின் புறம்பணையில் நகரின் அணிமையில் சேர்ந்து; வரிவண்டு...தொழுது - வரிவண்டுகள் மொய்க்கும் மலர்களாலும், நறுமணமுடைய தூப தீபங்களாலும் வழிபட்டுத் தொழுது; "காழிநகர் சேர்மின்"....பாடி - "காழி நகரின்கட் சேர்மின்கள், மக்களே!" என்று இறுதிச் சீர்களாலமைந்த மகுடமுள்ள திருப்பதிகத்தினை ஏழிசைகளுடனே பாடியருளியவாறே; எயின்...புகுந்தார் - மதிலையுடைய அந்தப் பழைய திருநகரத்தினுள்ளே புகுந்தருளினர். |
| (வி-ரை) வாழிவளர் - உலகம் வாழ்வாக ஊழியிலுமழியாது வளர்கின்ற. |
| புறம்பணையின் மருங்கு - நகர்ப்புறத்தின் பக்கம். |
| வரிவண்டு சூழுமலர் - வரிகளையுடைய வண்டு; வரிப்பாட்டு இசைக்கும் வண்டுகள் என்றலுமாம். வண்டு சூழு மலர் என்றது புதிதின் அலர்கின்ற நாண்மலர் என்றதாம், அதுவே வழிபாட்டுக்குரித்தா மாதலின். |
| நறும் தீபம் - தீபத்திற்கு நறுமையாவது நறுமணங் கமழும் நெய்யினால் இடப்பட்டு விளங்குதல்; மண்ணெண்ணெய் முதலிய கந்தகக் கலப்புள்ள தீநாற்றமுள்ள பண்டங்களால் இடுவிக்கும் இந்நாட் பைசாச விளக்குக்கள் இறைவழிபாட்டுக்காகா என்பது தெளிக. நறுமையை மலர்க்கும் கூட்டுக. |
| மலர் - தீப தூபங்களுடன் தொழுதலாவது - திருநகரையே நோக்கி மலர்களா லருச்சித்துத் தூப தீபங்களேந்தி வழிபடுதல். இறைவரைப் போலவே அவர் எழுந்தருளிய திருப்பதியும் வழிபடற்பாலது என்பது விதி; 2086, 2398 பார்க்க. |
| "காழிநகர் சேர்மின்" எனக் கடை முடிந்த -"காழி சேர்மினே" என்பது பதிகப் பாட்டுக்களின் இறுதிச் சீர்களாகிய மகுடம்; இதுவே பதிகக் குறிப்பும் கருத்துமாம். கடை முடிந்த - கருத்துட்கொண்ட - ஈற்றினைக்கொண்டு முடிந்த என்றலுமாம்; கடை - குறிப்பு - குறிக்கோள் என்றலுமாம்; கடை முடிந்த என்றதனால் இனிச் சீகாழியின்பேரில் பிள்ளையார் அருளும் பதிகம் எதுவும் நாம் பெறுவதில்லை என்றும், இதுவே நாம் பெற்ற அளவில் சீகாழியைப்பற்றிப் பிள்ளையாரது கடைசியாக முடிந்த திருப்பதிகமாம் என்றும் குறிப்புப்பெறக் கூறிய தெய்வக் கவிநயமும் காண்க. |
| ஏழிசை - திருவிராகமாகிய நட்டராகப் பண் கட்டளை. |
| எயின் மூதூர் - 1092 பார்க்க. |
| 1148 |
3047 | சேணுயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான் தாணினைந்த வாதரவின் றலைப்பாடு தனையுன்னி | |