|
| நீணிலைக்கோ புரமணைந்து நேரிறைஞ்சிப் புக்கருளி வாணிலவு பெருங்கோயில் வலங்கொண்டு முன்பணிந்தார். | |
| 1149 |
| (இ-ள்) சேணுயர்ந்த...உன்னி - ஆகாயத்திலுயர்ந்த திருத் தோணியிலே வீற்றிருந்தருளும் சிவபெருமானுடைய திருவடிகளை நினைந்த அன்பின் மேம்பாட்டினை எண்ணிக்கொண்டவராய்; நீள்...புக்கருளி - நீண்ட நிலைகளையுடைய கோபுரத்தினை அணைந்து எதிரில் நிலமுற வணங்கி எழுந்து உள்ளே புகுந்தருளி; வாணிலவு....பணிந்தார் - ஒளி விளங்குகின்ற பெருந் திருக்கோயிலினை வலமாக வந்து வணங்கி அங்கு அதன் முன்பு பணிந்தருளினர். |
| (வி-ரை) சேணுயர்ந்த...தனை உன்னி - சேண் - விசும்பு; ஆகாயம். வானுலகம் உயர்வுபெறக் காரணமாயிருந்த என்ற குறிப்புப்பட உரைத்தலுமாம். |
| தாள் நினைந்த ஆதரவின் தலைப்பாடு - ஆதரவு - அன்பு; தலைப்பாடு - பெருஞ் சிறப்பு; கிடைத்தற்கரிய பெரும்பேறு. உன்னி - நினைந்து நினைந்து மனமுருகி; உன்னி - உன்னியவாறே; படியே. "பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்" (11) என்ற பதிகக் குறிப்புக் காண்க. |
| நேர் இறைஞ்சி - திருக்கோபுரத்தின் முன் எதிரே நிலமுறப் பணிந்து. |
| வாள் நிலவு பெருங்கோயில் - இது புறத் திருமதிலின் உட்சுற்றில் அமைந்த சீகாழிக் கோயிலின் முழுமை. வாள் - ஒளி; ஞானஒளி. |
| முன் பணிந்தார் - முன் - பிரமபுரீசர் திருமுன்பு. |
| 1149 |
| வேணுபுரம் (சீகாழி) |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - நட்டபாடை - 1-ம் திருமுறை |
| வண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம் பெண்டான்மிக வானான்பிறைச் சென்னிப்பெரு மானூர் தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம் விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே. | |
| (1) |
| வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப் பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்றன பாடல் ஏதத்தினை யில்லாவிவை பத்தும்மிசை வல்லார் கேதத்தினை யில்லார்சிவ கெதியைப்பெறு வாரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - பெருமானூர் "மாடம் விண்டாங்குவபோல" விளங்கும் வேணுபுரமதுவேயாம்(3045). |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) அரிவை பெரியநாயகியம்மை; பெண்தான் மிக ஆனான் - சிருட்டிக் கிரமத்தில் சத்தியுடன் கூடி அருள்மிக எழுந்தருளினான்; ஆனான் - ஆக்கச் சொல் பொருளின் தன்மை குறித்தது. மலராள் - "தவளந்நெடு" என்ற குறிப்பினால் கலைமகளைக் குறித்தது; "கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம், விலையாயின சொற்றேர்தரு"(8); "நாவியலு மங்கையொடு"(தேவா); மாடம் விண்டாங்குவ போலும் - இதன் அரும் பொருட்குறிப்பை ஆசிரியர் எடுத்துக காட்டியருளினர் (3045); முன் உரைத்தவை பார்க்க. அதுவே பெருமான் ஊர் என்க; - (2) படைப்புந் நிலை யிறுதிப் பயன் - முன்னர்ப் "பெண்டான்மிக வானான்" (1) என்றதனைத் தொடர்ந்து கூறியது; நிலை - நிறுத்துதல் - திதி; இறுதி - சங்காரம்; கிறி - பலவகை விளையாடல்; புடைப் பாளையின் கமுகின்னொடு - மலர் |