[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1449

நாற்றம் - கமுகம்பாளைகள் விரிந்து அலரும் பருவத்தில் மிக்க மணம் வீசுவன. புடைப்பாளை - பாளை பக்கத்திற் புடைத்தல் கமுகுகளினியல்பு; தன்மை நவிற்சி; விடைத்தே - மிகுந்தே; - (3) கடம் - யானையின் மதம்; அவர் - அவ்யானையை அபிசார யாகத்தில் பெற்று ஏவிய இருடிகள்; படம் - பாம்பின் படம்; விடம் தாங்கிய கண் - விடம் போன்று கூரிய பார்வையுடைய கண்; அரவக்குழை - அரவம் போன்றமைந்த காதணி; - (4) மயிலாடிட மேகம் முழவதிர - ஆடிட - ஆடும்படி; முழவுபோல அதிர என்க; - (5) மந்தி மேனோக்கி நின்றிறங்கும் - குரங்குகள் கீழிறங்கும்போது கீழே நோக்காது மேலே பார்த்தவாறே இறங்கும் இயல்புபற்றிய தன்மை நவிற்சியணி; - (8) விலையாயின சொல் - விலை என்பது இங்கு உயர்ந்த பொருள் அமைதி என்ற பொருளில் வந்தது; - (10) வணங்காமைத் தெரியான் - கன்ம மேலீட்டினால் அவர்கள் வணங்கலாகாதவாறு தம்மை மறைத்து நின்றவர்; தூசு - புடவை; - (11) பாதத்தினின் மனம் வைத்தெழு - "தாணினைந்த வாதரவின் றலைப் பாடு தனையுன்னி" (3047) என்று ஆசிரியர் இதனை விளக்கி எடுத்துக்காட்டியது காண்க; ஏதம் - குற்றம்; மலவாதனை. இல்லா - இல்லையாகச் செய்கின்ற; கேதம் - தீமை.
காழி
திருச்சிற்றம்பலம்

திருவிராகம்

பண் - நட்டபாடை - 1-ம் திருமுறை

நம்பொருண மக்க ளென்று நச்சி யிச்சை செய்துநீர்
அம்பரம்ம டைந்து சால வல்ல லுய்ப்ப தன்முனம்
உம்பர்நாத னுத்தம னொளிம் மிகுத்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள் காழி சேர்மினே.

(1)

தக்கனார் தலைய ரிந்த சங்க ரன்ற னதரை
அக்கினோ டரவ சைத்த வந்தி வண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்த னுரைத்த பாடல் வல்லவர்
மிக்கவின்ப மெய்திவீற் றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - மலர் தூபதீபங்களுடன் நகரினைத் தொழுது, "காழிசேர்மினே" எனக் கடைமுடித்து உபதேசித்தருளிய பதிகம்; உலக வாழ்வு கடைமுடிந்து "சாவதன்முன் இசைந்து" காழி சேர்மின் என்ற கருத்தும் காண்க. பிள்ளையார் இவ்வுலகில்வந் தவதரித்தருளிய காரணநிலை முடிவெய்தும் நிலை கூடக், காழிசேர்ந்து, இனிப் போதநிலை முடிந்தவழி இறைவரை அடைந்து ஒன்றி உடனாகும் தருணம் அணிமையாதற் குறிப்பும் காணத்தக்கது.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) நம் பொருள்...நீர் - சீகாழி நகரின் தொடர்பே கொண்டு தம்பால் வந்த தாதையாரையும் பூசுரரையும் மாதவர்களையும், அவர்கள்மூலம் ஏனை உலகவரையும் நோக்கி உபதேசித்தருளியது; நச்சி - விரும்பி; நம் பொருள் - நம் மக்கள் - பொருட் சார்பு - உடற் சார்பு; இச்சை செய்தல்; பற்று வைத்தல்; அம்பரம் - கடல்; அம்பரமடைந்து - ஆசைக்கடலுள் அழுந்தி; அம்பரம் - துயிலிடம் என்று கொண்டு, இச்சைப் பெருக்கினுள் மயங்கி என்றலுமாம். சால - மிகவும்; அல்லல் உய்ப்பதன் முனம் - மிக்க துன்பம் அடைந்து கேடுறுவதன்முன்; முனம் - சேர்மின் - என்று கூட்டி முடிக்க. அல்லலுய்த்தபின் சேர்