|
| நிகழும் நாள் - அணைந்தார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| 1152 |
| 3051. (வி-ரை) கழல் வணங்கி மகிழ்வெய்த - கழல் வணங்கப்பெறுதலே மகிழ்ச்சிக்கு ஏதுவாம் என்பது. |
| ஆழியினும் மிகப் பெருகும் ஆசை - கடலினும் பெரியதாய் வளரும் ஆசை என்றது இனைத்தென்று அளக்கலாகாத தன்மை குறித்துப் பண்புபற்றி வந்த உவமம். "பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கின், நன்மை கடலிற் பெரிது"(குறள்) என்றபடி பிள்ளையார் உலகுக்குச் செய்யும் பரசமய நிராகரிப்பும் திருநீற்றி னாக்கமுமாகிய உதவிகள் பயன்றூக்காது செய்தமையின் அவற்றின் நன்மை கடலினும் பெரிதாம்; அதுபற்றி அவர் கழல் வணங்கி மகிழ அடியார் அவர்பாற் கொண்ட ஆசையும் கடலினும் பெரிதாயிற்று என்க. |
| திருமுருகர், வாழி திருநீலநக்கர், முதற்றொண்டர் - அறுபான்மும்மை மெய்யடியார்களுள் வருதலால் இவர்கள் முதன்மையாக எடுத்துரைக்கப் பெற்றார்கள். வாழி - பிள்ளையாரது திருமணச் சடங்குகள் செய்து வாழ்த்தப் பெறும் வாழ்வு குறிக்கப்பட்டது; 3137 பார்க்க. |
| சூழு நெடுஞ் சுற்றமுடன் - இவர்களும் பிள்ளையார் திருமணத்துடன் சேவித்து முன் செல்லும் சிறப்புப் பெறுபவர்கள்; பார்நிலவு கிளைசூழ" (3148). |
| தோணிபுரம் தொழுது - தோணிபுரத்தினையும் தோணிபுரேசரையும் முதலில் தொழுது பின்னர்ப் பிள்ளையார்பால் அணைந்தனர். இஃது அடியார் மரபு. முன் 2774, 2775-லும், பிறாண்டும் உரைத்தவை பார்க்க. |
| ஆழியினும் மிகப்பெருகும் ஆசையுடன் - எல்லையில்லாது பொங்கித் ததும்பும் சிவானந்த விளைவாகிய சிவபோகத்துட் புகும் நிலை அணித்தாகும் முற்குறிப்புப் பெற மிக்க ஆசையும் பெறுகிற்று என்றலுமாம். முன் "பேரின்பம்" (3050) என்றதும் காண்க. |
3052 | வந்தவரை எதிர்கொண்டு மனமகிழ்ந்து சண்பையர்கோன் அந்தமில்சீ ரடியார்க ளவரோடு மினிதமர்ந்து சுந்தரவா ரணங்கினுடன் றோணியில்வீற் றிருந்தாரைச் செந்தமிழின் பந்தத்தாற் றிருப்பதிகம் பலபாடி; | |
| 1154 |
3053 | பெருமகிழ்ச்சி யுடன்செல்லப்; பெருந்தவத்தாற் பெற்றவரும் மருவுபெருங் கிளையான மறையவரு முடன்கூடித் "திருவளர்ஞா னத்தலைவர் திருமணஞ்செய் தருளுதற்குப் பருவமிது" வென்றெண்ணி யறிவிக்கப் பாங்கணைந்தார். | |
| 1155 |
| 3052. (இ-ள்) வந்தவரை...இனிதமர்ந்து - முன் கூறியபடி வந்தவர்களாகிய திருமுருகர் முதலாகிய தொண்டர்களையும், ஏனையோர்களையும் எதிர்வரவேற்றுத் திருவுள்ள மிக மகிழ்ந்து சீகாழித் தலைவராகிய பிள்ளையார் அளவில்லாத சிறப்புடைய அந்த அடியவர்களுடனே இனிதாக விரும்பியிருந்தருளி; சுந்தர...வீற்றிருந்தாரை - அழகின் நிலைக்களமாகிய பெரியநாயகியாருடனே திருத்தோணியில் வீற்றிருந்த தோணியப்பரை; செந்தமிழின்....பலபாடி - செந்தமிழ் யாப்பினாலே பல திருப்பதிகங்களையும் பாடியருளி; |
| 3053. (இ-ள்) பெருமகிழ்ச்சியுடன் செல்ல - பெரிய மகிழ்வுடனே இவ்வாறு நிகழா நிற்க; பெருந்தவத்தால்.....உடன் கூடி - பெரிய தவஞ் செய்ததன் பயனாகப் |