|
| பிள்ளையாரைப் பெற்றெடுத்த தாதையாராகிய சிவபாதவிருதயரும் பொருந்திய பெருங்கிளைஞர்களாகிய மறையவர்களும் உடன் கூடி; திருவளர்...என்றெண்ணி - முத்தித்திரு வளர்தற்கேதுவாகிய ஞானத்தின் தலைவராம் பிள்ளையார் திருமணஞ் செய்தருளுவதற்கேற்ற பருவமிதுவாகும் என்று எண்ணி; அறிவிக்கப் பாங்கு அணைந்தார் - தமது அவ்வெண்ணத்தைப் பிள்ளையாருக்கு அறிவிக்கும் பொருட்டு அவர்பால் அணைந்தார்கள். |
| 1155 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3052. (வி-ரை) வந்தவரை - திருமுருகர் முதற்றொண்டர்களை. |
| அடியார்கள் என்றது அவர்களையும் முன்னர்க் கூறிய "தம்பெருமா னடியவர்க"ளையும்(3050). அவரோடும் இனிதமர்ந்து - முன் உரைத்தவை பார்க்க. |
| சுந்தர ஆர் அணங்கு - சுந்தரம் - என்றது அழகுக்கெல்லா மிருப்பிடமானவர் என்றது; ஆர் அணங்கு - பெரியநாயகி யம்மையார்; ஆர்தல் - பெருமையெல்லாம் நிறைதல். |
| அணங்கினுடன் தோணியில் வீற்றிருந்தவர் - "தோடுடைய செவியன்"(தேவா) என்று குறிக்கப்பட்டு அம்மையப்பராகி வெளிவந்து தமக்கு ஞான அமுதூட்டியருளிய தோணியப்பர் என்பதாம். பந்தம் - யாப்பு - தொடை. |
| திருப்பதிகம் பலபாடி - இப்பதிகங்கள் கிடைத்தில!; பந்தத்தால் என்றதனால் அத் தொடக்கமுடைய பதிகங் குறிப்பதாகக் கூறுவாருமுண்டு; அது முன்னர்க் (2006) குறிக்கப்பட்டமையாலும், "பதிகம் பல" என்பதனாலும், அவ்வுரை பொருந்தாது. |
| பாடிச் - செல்ல என்று வரும் பாட்டுடன் முடிக்க. |
| 1154 |
| 3053. (வி-ரை) செல்ல - நாட்கள் இவ்வண்ணமாக நிகழ்ந்துசெல்ல. |
| பெற்றவர் - மகவாகப் பெற்ற சிவபாதவிருதயர். பெருந்தவம் - முன் "தவம் புரிந்தார்"(1917) என்றவிடத் துரைத்தவை பார்க்க. |
| கிளையான மறையவர் - அவர் தம்மையும் பகவதியாரையும் ஆக இரு பரைவும் பற்றிய கிளைஞர். இருமரபும் குறிக்கப் பெரும் என்றார். |
| திருவளர் ஞானம் - முத்தி தரும் சிவஞானம். வளர் என்றது அன்றோடமையாது இன்றும் என்றும் வளரச் செய்யும் தன்மை குறித்தது. |
| திருமணம்....பருவமிது - திருமணப் பருவம்; இஃது ஆண்பாலார்க்குப் பதினாறாட்டைப் பருவத்தில் நிகழுமென்பது தமிழ் மரபு. இறையனாரகப்பொருளுரை - தொல்காப்பியம் முதலியவை பார்க்க. |
| அறிவிக்க - தமது அவ்வெண்ணத்தைப் பிள்ளையார்பால் அறிவிக்கும்பொருட்டு. |
| பாங்கு - அவர்பாலில். |
| அறிவிக்கும் பாங்கு - என்பதும் பாடம். |
| 1155 |
3054 | நாட்டுமறை முறையொழுக்க ஞானபோ னகருக்குங் கூட்டுவது மனங்கொள்வார் "கோதில்மறை நெறிச்சடங்கு காட்டவரும் வேள்விபல புரிவதற்கோர் கன்னிதனை வேட்டருள வேண்டு"மென விண்ணப்பஞ் செய்தார்கள். | |
| 1156 |
| (இ-ள்) நாட்டு மறை...மனங்கொள்வார் - உலகியல் நிலையில் வைதிக ஒழுக்கத்தினை ஞானசம்பந்தப் பிள்ளையாருக்கும் இசைவித்தலை மனங் கொள்வார்களாகி; |