|
| 3057. (வி-ரை) மறை வாழ - அந்தணர்தம் வாய்மை ஒழுக்கம் பெருகும் துறை வாழ - உடன்படலும் - முன்னர்க் "கூடாது" என்று மறுத்த பிள்ளையார் இங்கு உடன்படுதலுக்குக் காரணமென்னை? என்னின், இஃது என்றவாறு; அஃதாவது முன்னர் மறையவர்கள் பிள்ளையார்தாம் வேள்வி பல செய்வதனுக்கு ஓர் கன்னிதனை வேட்க என்று பிள்ளையாரது தனித் தன்மையில் வைத்து எடுத்துக் கேட்டனர்; அதற்குக் தாம் ஞானப் பெருநிலையில் நின்றமையால் தம்பொருட்டு வேள்வி வேட்கும் உரிமையும் கடமையு மிலராதலின் மறுத்தனர்; இங்கு அதனை விட்டு, நாங்கள் கேட்பது உம்பொருட்டன்று; மறைவழக்க மெடுத்தீராதலின் அந்த ஆசாரியத் தன்மையினின்று நீர் எடுத்த மறை வழக்கத்தினை வைதிக மாநெறி ஒழுகும் அறுதொழிலின் நிலையீது என நடந்துகாட்டி வேதநெறியினை வேர்ஊன்றி வளர வைக்க வேண்டும் என்று கேட்டனர்; ஆதலின் எமக்காகவன்றி, மறை வாழவும், மறையவரது அறுதொழிலின் ஒழுக்கமாகிய துறை வாழவும் யாம் இதனை மேற்கொள்வோம் என்று பிள்ளையார் உடன்பட்டவாறு என்க. |
| மறை வாழ....துறை வாழ - வாழ்தலாவது - அந்நெறி மக்களிடை தழைத்தோங்குதல்; "வேதநெறி தழைத்தோங்க" (1899). |
| வாய்மை ஒழுக்கம் - சத்திய சீலம் என்பர்; வேத வாய்மையில் விதித்த நெறி. |
| உடன்படலும் - வேள்வி பல புரிவதற்குத் தமக்கெனவன்றி அறுதொழிலின் வைதிக நெறி ஒழுக்கம் வாழ மணம் செய்ய உடன்பட்டருளிய பிள்ளையார், பின்னர்த் திருமணத்தில் "இந்தவில் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே!யிலடன் னோடு, மந்தமில் சிவன்றாள் சேர்வன்" என்னுமாதரவு பொங்க இறைவருடன் அணையவேண்டிச் செயல் புரிந்த (3140) நிலை யென்னையோ? எனின், அஃது ஆண்டு விளக்கப்படும்; கண்டு கொள்க. |
| கண்டார் தமைத்தொழுது மனங் களித்தார் - பிள்ளையார் உடன்பட்டருளியதற்கு அவரைத் தொழாது இறைவரைத் தொழுதனர்; இவ்வாறு உடன்பட்டருளியது இறைவர் திருவருட் செயலேயாம் என்ற கருத்துப்பற்றி. மேல்வரும் பாட்டுப் பார்க்க. பிள்ளையாரும் பின்னர்க் "குலமணம் புரிவித்தார் தம்கோயில்" (3141) என்று கருதியது காண்க. |
| பிளை - புனல் - அரவு - கறை - இவை ஒன்றற்கொன்று மாறுபட்ட தன்மையுடையன; எனவே இங்குச் சுற்றத்தார் வேண்டியதும், பிள்ளையார் முன்னர் மறுத்துப் பின்னர் இசைதலும், பின்னர் வரலாற்று நிகழ்ச்சியும் இவ்வாறே அமைவன என்பது குறிப்பு. |
| வாழும் - வாழும் - அவ்வாறு மாறுபடினும் அவை உயிர்களின் வாழ்விற்குக் காரணமாவன என்பது குறிப்பு. |
| 1159 |
3058 | திருஞான சம்பந்தர் திருவுள்ளஞ் செய்ததற்குச் தருவாய்மை மறையவருந் தாதையருந் தாங்கரிய பெருவாழ்வு பெற்றாராய்ப் "பிஞ்ஞகனா ரரு"ளென்றே உருகாநின் றின்பமுறு முள்மகிழ்சசி யெய்துவார்; | |
| 1160 |
3059 | "ஏதமில்சீர் மறையவரி லேற்றகுலத் தோடிசைவால் நாதர்திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பிபெறுங் காதலியைக் காழிநா டுடையபிரான் கைப்பிடிக்கப் போதுமவர் பெருந்தன்மை" யெனப்பொருந்த வெண்ணினார். | |
| 1161 |