1460திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

அவர் பெருந்தன்மை போதும் - என்க; போதும் - தகுதியாகும்; அமையும்.
எண்ணினார் - எண்ணித் துணிந்தார்கள்; "எண்ணித் துணிக கருமம்" (குறள்)

1161

3060
திருஞான சம்பந்தர் சீர்பெருக மணம்புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கண் மிகப்பேண
வருவாரும் பெருஞ்சுற்ற மகிழ்சிறப்ப, மகட்பேசத்
தருவார்தண் பணைநல்லூர் சார்கின்றார் தாதையார்.

1162

3061
மிக்கதிருத் தொண்டர்களும் வேதியரு முடனேகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்றெய்தத்,
தக்கபுகழ் நம்பாண்டார் நம்பிதா மதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தந் திருப்பாதந் தொழுதெழுவார்.

1163

3062
ப்பரிய பேருவகை யோங்கியெழு முள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு மறுகெல்லா மணிபெருக்கிச்
செப்பரிய வார்வமிகு பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
"யெப்பொருளு மெய்தினே"னெனத்தொழுதங் கெதிர்கொண்டார்

1164

3060. (இ-ள்.) திருஞான சம்பந்தர்.....பெருவாழ்வு - திருஞான சம்பந்தப் பிள்ளையார் சிறப்புப் பெருகும் திருமணம் புணரும் பெருவாழ்வினைப் பற்றி; திருத்தொண்டர்...மகிழ் சிறப்ப - திருத்தொண்டர்களும் மறையவர்களும் மிகப் பேணவும், வருவார்களாகிய பெருஞ் சுற்றமும் மகிழ்ச்சி மிகப் பெறவும்; மகட்பேச - மகட் கொடையினைப் பற்றிப் பேசும்பொருட்டு, தருவார் தண்பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் - தருக்கள் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருமண நல்லூரினைச் சார்கின்றாராகிய தாதையார்;

1162

3061. (இ-ள்.) மிக்க....உடன் ஏக - மிகுந்த திருத்தொண்டர்களும் மறையவர்களும் உடன் செல்ல; திக்கு நிகழ்....எய்த - எல்லாத் திக்குக்களினும் நிகழ்கின்ற திருநல்லூர்ப்பெருமணத்தினைச் சென்று சேர; தக்கபுகழ்...தொழுதெழுவார் - தகுந்த புகழினையுடைய நம்பாண்டார் நம்பிகளும் அவரது வரவினைக் கேட்டுச் செவ்வானத்தை ஒத்த சடைமுடியினையுடைய சிவபெருமானது திருவடிகளைத் தொழுது எழுவாராகி;

1163

3062. (இ-ள்.) ஒப்பரிய....உள்ளத்தால் - ஒப்பில்லாத பெருமகிழ்ச்சி ஓங்கி மேலெழும் மனத்தினோடு; அப்பு நிறை...அணிபெருக்கி - நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து வீதியை யெங்கும் மிக அலங்கரித்து; செப்பரிய....சென்றே - சொல்லுதற்கரிய ஆசை மிகுகின்ற பெருஞ் சுற்றத்தாருடன் சென்றே; எப்பொருளும்...எதிர்கொண்டார் - "உறுதிப்பொருள்க ளெல்லாவற்றையும் நான் அடைந்தவனாயினேன்" என்று கூறித் தொழுது அங்கு அவர்களை எதிர்கொண்டனர்.

1164

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3060. (வி-ரை.) திருஞான சம்பந்தர் - இப்பெயராற் கூறிய குறிப்பு முன் (3058) உரைக்கப்பட்டது.
சீர் பெருக - உலகம் சிறப்பினால் மேன்மேலும் ஓங்கி வளர; இது பின்னர்த் திருமண நிகழ்ச்சியின் விளைவுகளிற் காண்க.