1462திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

மறுகெல்லாம் - வீதியெங்கும்; அப்பு - வாச நன்னீர். நிறை குடமும் விளக்கும் வைத்து என்க. அணி - வாழை - தோரணம் முதலிய பிற அலங்காரங்கள்.
பெருஞ் சுற்றம் - பெருமையாவது அணிமையிற் சிவனடி சாரப் பெறும் பேறு வாய்ப்புள்ளமை குறிப்பு. பின்னரும் "பார்நிலவு கிளை" (3148) என்பார்.
எப்பொருளும் எய்தினேன் - உம்மை - முற்றுமை. எப்பொருளும் என்றது பதமுத்தியும் பரமுத்தியும் படிமுறையால் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என நூன்முடிபு கூறும் உறுதிப்பொருள்கள் எல்லாமும். உண்மையாகவே ஈண்டு எல்லாவற்றுள்ளும் சிறந்த வீடுபேறு எய்தி முடிந்தது காண்க.
எய்தினேன் - தெளிவுப்பொருட்டு. "வாராக் காலத்து வினைச்சொற் கிளவி, சிறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும், இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை" (தொல். சொல். வினையி - 48) என்பதிலக்கணம்; எய்தினவ னாயினேன்; எனது பிறவி பயன்பெற்றது என்பது.
தொழுது - பிள்ளையார் சார்பினரும் திருத்தொண்டரும் ஆதலின் தொழுதல் முறை என்க. அங்கு - நல்லூர் சார்கின்ற அவ்விடத்து.
விளக்கால் - என்பதும் பாடம்.

1164

3063
எதிர்கொண்டு மணிமாடத் தினிலெய்தி யின்பமுறு
மதுரமொழி பலமொழிந்து வரன்முறையாற் சிறப்பளிப்புச்
சதுர்முகனின் மேலாய சண்பைவரு மறையவரும்
முதிருணர்வின் மாதவரு மணைந்ததிற மொழிகின்றார்;

1165

3064
"ஞானபோ னகருக்கு நற்றவத்தி னொழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பான் மகட்பேச வந்த"தென
"ஆனபே றந்தணர்பா லருளுடைமை யா"மென்று
வானளவு நிறைந்தபெரு மனமகிழ்ச்சி யொடுமொழிவார்,

1166

3065
"உம்முடைய பெருந்தவத்தா லுலகனைத்து மீன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலிற் குழைத்தவா ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை யாமுய்யத் தருகின்றோம்;
வம்மி"னென வுரைசெய்து மனமகிழ்ந்து செலவிடுத்தார்.

1167

3063. (இ-ள்.) எதிர்கொண்டு....சிறப்பளிப்ப - எதிரேற்று அழைத்துக் கொண்டு சென்று மணிமாடத்தின்கண் சேர்ந்து இன்பம் பொருந்து மதுரமொழிகள் பலவற்றையும் சொல்லி முறைமைப்படி உபசரித்து விருந்து முதலாகிய சிறப்புக்களையும் நம்பாண்டார் நம்பியார் செய்ய; சதுர்முகனின்......மறையவரும் - பிரமதேவனின் மேம்பட்ட சீகாழி மறையவராகிய சிவபாதவிருதயரும்; முதிருணர்வின் மாதவரும் - கல்வி கேள்விகளால் முதிர்ந்த வுணர்வினையுடைய திருத்தொண்டர்களும் ஏனை வேதியர்களும்; அணைந்த திறம் மொழிகின்றார் - தாங்கள் வந்து அணைந்த திறத்தினை மொழிகின்றிர்களாகி;

1165

3064. (இ-ள்.) "ஞானபோனகருக்கு....வந்தது" என - ஞானவமுதுண்டருளிய பிள்ளையாருக்கு நல்ல தவம் பொருந்திய இனிய ஒழுக்கத்தினாலே குற்றமற்ற சீலத்தினையுடைய உமது மகளை மணம் பேச நாங்கள் வந்துள்ளோம்" என்று எடுத்துச் அருளுடையாமையாம் "என்று - "இவ்வாறு வரப்பெறுத