|
| நற்றவத்து - உம்பால் - மகட்பேச - இனி, மகட்பேச்சின் றிறத்து அடுத்து வருவது மணமகளின் றிறமாதலின் அதனைச் சிவபாதவிருதயரும் பிறரும் தாங்கள் அறிந்து துணிந்துகொண்டவாறு இவ்வாற்றாற் கூறியபடி; உமது தகுதியும் உமது மகளாரின் தகுதியும் அறிந்தபடியே மகட்பேச வந்தோம் என்பது குறிப்பு. (3059) பார்க்க. "குணம் பேசிக் குலம்பேசி" (1289) என்றவாறெல்லாம் மகட்கொடை துணிதற்கு முன்னர்ப் பேசி யறியவேண்டியவை எவையுமில்லை என்று இருதிறமும் நிலை கூறியபடி காண்க. |
| ஆனபேறு....ஆளுடைமையாம் - என்றே - என்பால் மகட்பேச வரலான பேறு நான் பெற்றதற்கு அந்தணர்களாகிய நும்பால் நின்ற அருளுடையமையேயன்றி எனது தகுதி காரணமன்று என்றபடி. ஆனபேறு - பிள்ளையார் திருமணஞ் செய்தற்குத் திருவுள்ளம் பற்றிய பேறானது; அந்தணர்.....என்று - மறையவர்கள்பால் திருவருளுடைமையினாலாம் என்பது திரு. ராம. சொ. ஐயா அவர்கள் குறிப்பு. |
| வானளவு நிறைந்த - ஏனைய எல்லாப் பூகங்களினும் நிறைந்து அவற்றுக்கு இடங்கொடுத்து ஓங்கிநிற்கும் வான்போலத் தம்முள் எங்கும் நிறைந்து நிமிர்ந்த மனமகிச்சி. அளவு - உவமஉருபு. ஆகாயம் வரை உயர்ந்த என்றலுமாம். |
| மொழிவார் - உரை செய்து - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| மகட்பேசி - என்பதும் பாடம். |
| 1166 |
| 3065. (வி-ரை.) உம்முடைய பெருந்தவத்தால்...வம்மின் - என்றது நம்பாணடார் தம்பால் மகட்பேசிய சிவபாதவிருதயரை நோக்கிக் கூறியது; பெருந்தவத்தால் அமுதுண்டார்க்கு என்று கூட்டுக. |
| உம்முடைய...அமுதுண்டாருக்கு - உலகறிந்த பெருமையுடை யாராதலின் பெயர் மாத்திரையால் "ஞானபோனகருக்கு" (3064) என அவர் கூறியவாறே நம்பாண்டாரும் அப்பெருமைகளைத் தாம் உணர்ந்துகொண்டபடியை விரித்துரைத்தவாறு. |
| ஆரமுது - சிவஞானம்; ஆர்தல் - எல்லா வுயிர்களினும் நிறைந்து பயன் தருதல். |
| எம்முடைய...தருகின்றோம் - மகட்கொடை செய்வோர் மகனைப் பெறும் வீட்டாருக்கும் உய்திபெறும் ஒரு குடும்ப உத்தாரணம் - நிலைநாட்டுதல் - ஆகிய உதவி செய்கிறார்கள் என்பது அறநூல் விதி; இங்கு அவ்வாறன்றி நம்பாண்டார் தமது மகட்கொடையினால் பயனாக அவரும் தமரும் உலகமெல்லாமும் திருமணத்தில் உய்யப் பெற்று வீடுபெறும் நிலை ஈண்டுக் கருதத்தக்கதாம். தருகின்றோம் - தன்மையும் தமது மனைவியாரையும் தமர்களையும் உளப்படுத்திக் கூறிய உளப்பாட்டுப் பன்மை. |
| வம்மின் - மணநிகழ்வதற் குரியவற்றைச் செய்து வாருங்கள். |
| செலவிடுத்தார் - இசைவு தந்து சீகாழிக்குச் சென்று உரியவாறு வரும்படி விடைகொடுத் தனுப்பினர். |
| 1167 |
3066 | பேருவகை யாலிசைவு பெற்றவர்தா மீண்டணைந்து காருலவு மலர்ச்சோலைக் கழுமலத்தை வந்தெய்திச் சீருடைய பிள்ளையார்க் கவர்நேர்ந்த படிசெப்பிப் பார்குலவுந் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்; | |
| 1168 |
3067 | திருமணஞ்செய் கலியாணத் திருநாளுந் திகழ்சிறப்பின் மருவியவோ ரையுங்கணித மங்கலநு லவர்வகுப்பப் | |