[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1467

(வி-ரை.) செல்வம் - அருட்செல்வமும் பொருட்செல்வமும்.
செழுந் திருவீதிகளெல்லாம் - நிரைத்தே - நாற்றி - அலங்கரித்தார் - என்று கூட்டுக. செழும் திரு - செழுமை - மாடங்களிக் செல்வச் சிறப்பும் மகவுகள் நிறைந்த மங்கலமும். திரு - மறைவளர் திரு; முன்னமே அணி நிறைந்த திருவீதிகளைத் திருமணத்தின் பொருட்டு மேலும் நிறைகுடம் விளக்கு முதலியவற்றால் அலங்கரித்தனர் என்க. நிரைத்தே - வரிசை பெற அமைத்தே; நிரை - வரிசை.
எல்லையிலா ஒளி முத்துமாலைகள் - நாற்றி - முத்துக்களின் ஒளியின் சிறப்புப் பற்றி முன்னர் விறன்மிண்ட நாயனார் புராணத்தில் உரைத்தவையும், "சோதிமுத்து - நீற்றொளி" (2114) என்றவிடத் துரைத்தவையும், பிறவும் பார்க்க. ஈண்டு முத்துமாலைகள் நாற்றியது - (முத்து விடுபட்டது) வீடுபேற்றின் குறிப்பு. பிள்ளையாரைத் திருமணக்கோலம் செய்தல் முற்றும் முத்துக்களாலே அமையும் நிலை பின்னர்க் காண்க அல்கு பெருந்திரு ஒங்க - என்றதும் அக்குறிப்பு. பெருந்திரு - திரு எல்லா வற்றுக்கும் மேலாகிய சிவபோகமாகிய முத்தித் திருவின் தன்மை.
நிறைத்த - என்பதும் பாடம்.

1170

குறிப்பு - இப்பாட்டின் கீழ் 3074 "எங்கணும்" என்னும் பாடல் சில பதிப்புக்களில் உள்ளது.
3069
ருந்தவத்தோ ரந்தணர்க ளயலுள்ளோர் தாமுய்யப்
பொருந்துதிரு நாளோலை பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார் நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தான் மகட்கொடுப்பார் வதுவைவினை தொடங்குவார்

1171

3070
ன்னுபெருஞ் சுற்றத்தா ரெல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக் கெழுநாளா நன்னாளிற்
பன்மணிமங் கலமுரசம் பல்லியங்க ணிறைந்தார்ப்பப்
பொன்மணிப்பா லிகைமீது புனிதமுளை பூரித்தார்.

1172

3069. (இ-ள்.) அருந்தவத்தோர்.....அயலுள்ளோர் - அரிய தவத்தாராகிய தொண்டர்களும் அந்தணர்களும் மற்றும் அயலில் உள்ளவர்களுமாகிக் கூடிய; பொருவிறந்தார் - ஒப்பற்ற பெரியோர்கள்; தாமுய்ய - தாம் உய்யும்படி; பொருந்து திருநாளோலை கொண்டணைய - பொருந்தும் திருமண நாளோலையினை எடுத்துக் கொண்டு வந்து அணைந்தார்களாக; திருந்த புகழ்....எதிர்கொண்டு - திருந்தும் புகழினையுடைய நம்பாண்டார் நம்பி அச்சிறப்பினை முறைமையின் எதிர் ஏற்றுக்கொண்டு; வருந் தவத்தான்........தொடங்குவார் - முன்னைத் தொடர்பினால் வரும் தவத்தின் பயனாலே தம் மகளாரைப் பிள்ளையாருக்கு மணமகளாகக் கொடுப்ராகித், திருமணத்திற்குரிய செயல்களைச் செய்யத் தொடங்குவாராக;

1171

3070. (இ-ள்.) மன்னுபெரும்.....வந்தீண்டி - நிலைபெற்ற பெரிய சுற்றத்தார்கள் எல்லாரும் (சீகாழியின்கண்) வந்து கூடி; நன்னிலைமை....நன்னாளில் - திருமணமாகிய நன்னிலை பெறும் திருநாளுக்கு ஏழு நாட்களின் முன்னாகிய நல்ல நாளிலே; பன்மணி....ஆர்ப்ப - பல அழகிய மங்கல முரசும் பலவகை இயங்களும் நிறைந்து