1468திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

முழுங்க; பொன்....பூரித்தார் - பொன்னிட்ட அழகிய பாலிகைகளின்மீது தூய முளையை நிறைத்துத் தெளித்தார்கள்.

1172

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3069. (வி-ரை.) அருந் தவத்தோர்களும் அந்தணர்களும் அயலுள்ளோர்களும் ஆகிய பொருவிறந்தோர் - என்க; தவத்தோர் - சிவத்தொண்டு செய்வோர்; அயல் - தொண்டரும் அந்தணருமல்லாத பிறர்.
தாமுய்ய - நாளோலை கொண்டுவரும் தாங்களும் அதனைப் பெறும் நம்பாண்டாரும் சுற்றமும் உய்ய என்க. யாமுய்யத் தருகின்றோம் - (3065) என்றதற்கேற்ப நம்பாண்டார் இவர்கள் நாளோலை கொணர்தலைத் தாம் உய்திபெறக் கொண்டு வருதலாக மதித்து ஏற்றனர் என்றலுமாம்.
திருந்து புகழ் - முன்னைப் புகழ் இம் மகட்கொடையினால் மேல் திருந்தும் என்க.
சிறப்பு - நாளோலை கொணரும் மங்கல நிகழ்ச்சி; எதிர்கொண்டு - எதிர் ஏற்றுக்கொண்டு; 156 பார்க்க. வரும் தவமாவது முன்னைத் தொடர்பால் வரும் தவம்.
தொடங்குவார் - இது நல்லூரில் மணமகள் திருமனையினிகழ்ச்சி; மேல்வரும் பாட்டிற் கூறுதல்சீகாழியில் மணமகனாராகிய பிள்ளையாரது திருமாளிகையின் நிகழ்ச்சி. நம்பாண்டார் அங்கு வதுவைவினை தொடங்குவாராக, ஈண்டுச் சுற்றத்தார் ஈண்டிப் பித்தார் என இருபாலும் தொடர்புபடுத்தி முடிக்க. மணத்தொடர்பு பற்றிச் செய்யுள் வினைமுடிபும் தொடர்ந்து வருதல் கவிநயம்.

1171

3070. (வி-ரை.) வந்து ஈண்டி - சீகாழியில் வந்து நிறைந்து.
நன்னிலைமைத் திருநாள் - மணஞ்செய் நாள்; மணத்தைச் சார்ந்தார்கள் எல்லாரும் நன்னிலையாகிய சிவானந்த பரிபூரண நிலையினை அடையும் திருநாள் என்றதும் குறிப்பு.
எழுநாள் - முன் ஏழாவது நாள்; பூரித்தல் - முன் (3067) கூறியபடி விதைத்து முளைத்த முளைகளை எடுத்துப் பாலிகைப் பாண்டில்களில் மண்ணிட்டுத் தெளித்து நீர் வார்த்தல். இது திருமணத் திருநாளின்ஏழாநாளிற் செய்வது மரபும் விதியுமாம்.
பன்மணி....ஆர்ப்ப - இச்சடங்கு மங்கல முழக்குக்களுடன் நிகழ்த்தப்படுவதொன்றாம்.இந்நாளில் நிகழும் ஒருநாள் அரைநாட் கல்யாண முறைகளுடன் இதனையும் ஒத்துக் காண்க; பாலிகை விதைத்தல், முளை பூரித்தல் இவை மணச் சடங்கின் சிறந்த அங்கமாவன. கோயிற் சிறப்புக்களிலும் திருமுளை (அங்குரார்ப்பணம்) என்பது சிறந்த அங்கமாகும் என்பது ஆகமவிதி; இது சிருட்டிநிலை குறிக்கும். திருமணங்களில் இந்த முளைகளின் செழுமை, வளர்ச்சி, செறிவு முதலியவற்றின் அளவே அவ்வம் மணங்களின் சிறப்பும் பயனு மாவன என் றறிகுறியாகக் காணும் வழக்கு முண்டு. புனித முளை என்றது சிவமணமாய் நிகழ்தற் குறிப்பு. பூரித்தல் - நிறைத்தல்.
3071
சேணுயரு மாடங்க டிருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைக ணிகரிலணி பெறவிளக்கிக்
காணவருங் கைவண்ணங் கவினோங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண் மங்கலக்கோ லம்புனைந்து,

1173

3072
நீடுநிலைத் தோரணங்க ணீண்மறுகு தொறுநிரைத்து
மாடுயருங் கொடிமாலை மணிமாலை யிடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின் பெரும்பந்தர் பலபுனைந்தார்.

1174