| மணிக்கடை - மணிகளிழைத்த முன்கடைவாயில் முகப்பு. கண் - ஏழனுருபு. |
| நிகரிலொளி - கைவினைஞர் - என்பனவும் பாடங்கள். |
| 1173 |
| 3072. (வி-ரை.) நீடுநிலை - மேல் உயர நீண்ட நிலையினையுடைய; நீண்மறுகு - மறுகுகள் வளைவின்றி ஒழுங்குபெற நீண்டு செல்லுதல் நகரச் சிறப்பு அமைதிகளுள் ஒன்று. |
| கொடிமாலை மணிமாலை - கொடிமாலை - கொடிகளையும் மலர் மாலைகளையும்; கொடிகள் போன்ற மாலைகளை என்றலுமாம்; மணிமாலை - பலவண்ண மணிகளைக்கோத்த மாலைகள். இடைபோக்கி - இடையிடையே புகுத்தி - |
| சேடு - ஒளி; சாந்து - வெண்சுண்ணம்; செஞ்சாந்து முதலியவை. நீவுதல் - ஒழுங்குபெறப் பூசுதல். |
| பீடு....பந்தர்கள் - பீடு - பெருமை; மணிகளுள் முத்துக்கள் சிறந்தன என்பது. "முத்து மாலைகள்" (3068); முன்கூறியது முன் ஏழாநாள் அணிச்சிறப்பு; இங்குக் கூறுவன அற்றைநாண் முதலாகத்திருமணநாளின் முன்னாள்வரை செய்யும் மணவணிச் சிறப்பு; மேல்வரும் பாட்டுப் பார்க்க. |
| முத்தின் பெரும்பந்தர் பல - மறுகுகளில் அங்கங்கும் அமைக்கும் பற்பல முத்துப் பந்தர்கள்;இறைவர்பால் முத்துப்பந்தர் பெற்ற பெருமானாதலின் அக்குறிப்புப் பெறவும்; "அப்பந்தர் மீதணையத் திருமன்றி, லண்டர்பிரா னெடுத்ததிரு வடிநீழ லெனவமர்ந்தார்" (2293) என்றபடி, இனி இறைவரது திருவடிநீழலில் மீளாநிலைமையினை இத்திருமணத்தில் சார்ந்தா ரெல்லாருடனே அடையப் புகுகின்றார் பிள்ளையார் என்ற குறிப்புப் பெறவும்; வீடுபேறு குறிக்கும் முத்துப்பந்தர் பலவற்றையும் அமைத்தனர்; பல - உடன் வீடு பெறுவார் பலராதலின் பலவும் அமைத்தனர் என்பதும் குறிப்பு. |
| பீடுகெழு - பெரும் - என்ற அடைகளின் குறிப்பும் காண்க. |
| 1174 |
3073 | மன்றல்வினைத் திருமுளைநா டொடங்கிவரு நாளெல்லாம் முன்றிறொறும் வீதிதொறு முகநெடுவா யில்கடொறும் நின்றொளிரு மணிவிளக்கு நிறைவாசப் பொற்குடங்கள் துன்றுசுடர்த் தாமங்க டூபங்க டுதைவித்தார். | |
| 1175 |
| (இ-ள்.) மன்றல்வினை....நாளெல்லாம் - கல்யாணச் செயல்களுள்ளே திருமுளை பூரித்தநாள் தொடங்கி வருகின்ற நாட்களிலெல்லாம்; முன்றில்தொறும்....வாயில்கடொறும் - வீதிகள்தோறும், மாடங்களின் முன்றில்கள்தோறும், நீண்ட முன்வாயில்கள்தோறும்; நின்றொளிரும்.......துதைவித்தார் - நிலைநின்று விளக்கம் செய்யும் மணி விளக்குக்களும், மணமுடைய தூய நீர்நிறைந்த பொற்குடங்களும் நெருங்கிய ஒளியுடைய மாலைகளும் தூபங்களுமாகிய இவையிற்றை நெருங்க வைத்தார்கள். |
| (வி-ரை.) மன்றல் வினைத் திருமுளை நாள் - கலியாணச் செயல்கள் திருமுளை பூரித்த ஏழாநாளாகிய நன்னாளிலிருந்து தொடங்குகின்றன என்பதாம். (3070). |
| வருநாள் எல்லாம் - பின்னர்த் தொடர்ந்து வருகின்ற ஆறுநாட்களிலும். |
| வீதிதொறும் முன்றில்தொறும் என்க; முன்றில் - இல்முன் என்பது முன்றில் என வந்தது. முகநெடு வாயில் - முதல் வாசல்; முகப்பு வாயில். |
| நின்றொளிரும் - கெடாது நின்று விளங்கும். மணிவிளக்கு - சூரியவொளியினாலும் ஏனைப் பெருவிளக்குக்களின் சார்பினாலும் எதிர்ஒளி வீசும்படி பெருமணிகளையே விளக்குக்களாக அமைத்தலுமுண்டு. |