1472திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

3079
னையபல வேறுதொழி லெம்மருங்கு நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லா மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்க ணெருங்குதலா னிதிக்கோமான்
றனையிறைவர் தாமேவச் சமைத்ததுபோ லமைந்துளதால்.

1181

3075. (இ-ள்.) மங்கல தூரியம்....இயம்ப - மங்கலம் பொருந்திய பெரு வாத்தியங்களின் நாதம் வீதிகள்தோறும் நின்று ஒலிக்க; பொங்கிய....பொலிய - மேன்மேல் ஓங்கி எழுந்த நான்மறைகளின் முழக்கான கடலோசையினும் பெருகி விளங்க; தங்கும்...மணம் பெருக - தங்கும் நறுமணமுள்ள அகில் துண்டங்களின் மிக்க செழும் புகையினோடு செந்தீயுடன் கூடிய வேள்விப் புகையும் கூடித் தெய்விக மணமாக வாசனை பெருகவும்;

1177

3076. (இ-ள்.) எண்டிசையின்....நெருங்க - எட்டுத் திசைகளில் உள்ள மக்களும் அங்கங்குஉள்ள வளப்பொருள்களோடு நெருங்க; பண்ட நிறை.....பொலிய - பண்டங்கள் நிறையச் சேமிக்கும் சாலைகளும் பலவேறு விதமாக விளங்க; மண்டு பெரு...மலிய - நெருங்கும் பெருநிதியின் குவியல்கள் மலை விளங்குதல்போல மலிய; உண்டிவினை....ஒங்க - உணவுத் தொழிலின்கண் ணின்றெழும் ஓசைகள் இடையறாத சத்தமாகப் பெருக;

1178

3077. (இ-ள்.) மாமறை நூல்....துவன்ற - பெருமறை நூல்களின் விதித்த சடங்குகளின் பொருட்டு வகுத்த முறைவழி மரபினாலே தூய மணத்திற்குரிய நல்ல வேள்விப் பொருள்களை அமைத்து ஒழுங்குபடுத்துவோர்களது தொழில் நெருங்க; தாமரையோன்...பொலிவெய்த - பிராமதேவனைப் போன்ற பெருந்தவ மறையவர்கள் தாங்கள் எடுத்த பூக்கள் பொருந்திய பொற்குடங்களில் நிறைத்த புண்ணிய நீர் விளங்க,

1179

3078. (இ-ள்.) குங்குமத்தின்...குழும் - குங்குமப்பூவின் கொழுவிய சேறாகிய சந்தனக் குழம்பினை அமைப்பவர்களுடைய இனங்கள் கூட; பொங்குவிரை....தொகை விரவ - மிக்க மணமுடைய புதிய வாசனைப்பண்டங்கள் கூட்டிய கலவையின் தூபப் புகை எடுப்பவர்களின் கூட்டம் பொருந்த; துங்க நறும்...நெருங்க - உயர்வுடைய நறுமணமுள்ள கற்புரச் சுண்ணத்தை யிடிப்போர்கள் நெருங்க; எங்கும்...பெருக - எவ்விடத்தும் மலர்களாலாகிய பிணையல் முதலிய பலவேறு மாலைகளைத் தொடுப்பவர்களின் கூட்டங்கள் மிகப் பெருக;

1180

3079. (இ-ள்.) இனைய பல...மறைமூதூர் - இவ்வாறாகிய பலவகைப்பட்ட வெவ்வேறு தொழில்களை எல்லாப் பக்கத்தும் ஒழுங்குபடச் செய்கின்ற மனைகள் வளரும் வீதிகளிளெல்லாம் மணவணியை விளங்கக் காட்டும் மறையவர்கள் வாழும் அவ்வூர்; நினைவரிய...நெருங்குதலால் - நினைத்தற்குமரிய பெரிய வளங்கள் நெருங்கியஅதனாலே; நிதிக் கோமான்....அமைந்துளதால் - குபேரனை இறைவர் ஏவியதனால் அவனே வகுத்ததுபோல அமைந்துள்ளதாம்.

1181

இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3075. (வி-ரை.) தூரியம் - இயம்ப - என்பது மரபு வழக்கு.
இயம்ப - முழங்க; தூரியம் - பெரு வாத்தியங்கள்; தூரியம் மங்கலத்தை இயம்ப என்ற குறிப்பும் காண்க. இயம்புதல் - வெளிப்படுத்தல்.