| மொழிவழி யேவல்கேட்ப" (465); "நம்ப ரருளினா லளகை வேந்தன், றன்பெரு நிதியந் தூர்த்துத் தரணிமேல் நெருங்க....மன்பெருஞ் செல்வ மாக்கி வைத்தனன்" (844) என்றவற்றை இங்கு நினைவுகூர்க. |
| மனை வளரும் மறுகு எல்லாம் - எவ்வெவ்வகை மக்கள் வாழும் எவ்வெவ் வீதிகள் யாவையும். |
| நிறைந்துளதால் - என்பதும் பாடம். |
| 1181 |
| வேறு |
3080 | மாறி லாநிறை வளந்தரு புகலியின் மணமீக் கூறு நாளின்முன் னாளினில் வேதியர் குழாமும் நீறு சேர்திருத் தொண்டரு நிகரிலா தவருக் காறு சூடினா ரருட்டிருக் காப்புநா ணணிவார், | |
| 1182 |
3081 | வேத வாய்மையின் விதியுளி வினையினால் விளங்க ஒத நீருல கியன்முறை யொழுக்கமும் பெருகக் காத னீடிருத் தொண்டர்கண் மறையவர் கவினார் மாதர் மைந்தர்பொற் காப்புநா ணகர்வலஞ் செய்தார். | |
| 1183 |
| 3080. (இ-ள்.) மாறிலா...புகலியின் - ஒப்பற்ற நிறைந்த வளம் தருகின்ற சீகாழிப் பதியில்; மண மீக்கூறு நாளின் முன்னாளினில் - திருமணத்தினை மேற்கொள்ளும் திருநாளின் முன்னாளிலே; வேதியர் குழாமும் நிறுசேர் திருத்தொண்டரும் - மறையோர் கூட்டமும் திருநீறு அணிந்த திருத்தொண்டர்களும் கூடி; நிகரிலாதவருக்கு...அணிவார் - ஒப்பற்றவராகிய பிள்ளையாருக்குக் கங்கையைத் தலையிற் சூடிய இறைவரது அருள் பொருந்திய திருக்காப்பு நாணினை அணிவார்களாகி, |
| 1182 |
| 3081. (இ-ள்.) வேத வாய்மையின்....விளங்க - வேத வாய்மையிற் கூறும் விதிகள் இச்செயலால் விளங்கவும்; ஒத...பெருக - கடல் சூழ்ந்த உலக நடையின்முறையான வொழுக்கங்களும் பெருகவும்; காதல்....வலஞ் செய்தார் - அன்புமிக்க திருத்தொண்டர்களும் மறையோர்களும் அழகிய மகளிர்களும் ஆடவரும் கூடிப் பொன்னாலாகிய காப்பு நாணினை நகர்வலஞ் செய்வித்தார்கள். |
| 1183 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3080. (வி-ரை.) மாறிலா வளம் தரு - நிறைவளம் தரு - என்க. மாறிலா வளமாவது சராசரங்க ளெல்லாம் சிவம்பெருகத் தரும் தன்மை; நிறைவளமாவது திருமணத்தின் பொருட்டு வந்த எண்டிசையினுள்ளோரும் கொணர்ந்த ஈண்டு வளமும், சீகாழியின் இயல்பாயுள்ள உலகியல் வளமும் ஆம்; தருதல் - பெறுதற்கிடமாதல். |
| மணமீக்கூறு நாள் - மணஞ்செய் திருநாள்; மீக்கூறும் - மேற்கொள்ளும். |
| முன்னாளினில் - காப்பு நாண் அணிவார் - திருமண நாளின் முன்னாளில் காப்பு நாண் அணிதல் மரபு; மணவினைச் சடங்குகள் காப்புநா ணணிதலுடன் தொடங்குகின்றன; காப்புநாண் கட்டுதல் மணமகன், மணமகள் இருவர்பாலினும் நிகழ்வது. "கற்பகப் பூங்கொம் பன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப், பெற்புறு சடங்கு முன்னாப் புரிவுடன் செய்த வேலை" (3120); இவ்வாறு உரியபடி காப்புச் சேர்த்த பின்னர் அதனைப் பின்னர்ச் சடங்குடன் அவிழ்க்கின்ற அளவும் சிவனது காவல் சிறக்கப் |