1476திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பெற்றுள்ளார் என்றும், சிவமுஞ் சத்தியுமாகவே அவ்விருவரும் பாவிக்கப் பெறுவர் என்றும் உலகியலின் தொடக்குக்கள் ஒன்றும் அவரைச் சாரா என்றும் கொள்வது மரபு. காப்பு - காவல்பெறு நிலை; "கண்ணுதலான் றன்னுடைய காப்புக்களே" (தேவா); மேல் அருட்டிருக் காப்புநாண் - என்பதும் காண்க.
வேதியர் குழாமும் - திருத்தொண்டரும் - வேதியர் - பிள்ளயைரது உலகியல் நிலைச் சுற்றம்; திருத்தொண்டர் - சிவச்சார்பு பற்றிய அவரது சுற்றம்; "சுற்றம் மாசிலா வீச னன்பர்" (திருவிளை. புரா); முன்னவர் உலகத்துடன் விடும் சுற்றமும், பின்னவர் என்றும் விடாத சுற்றமுமாம் என்பது "பெருங்கிளைக்குத் தகுதியினாற் றலையளிசெய்து...அடியவர்க ளுடனமர்ந்து" (3050) என முன் குறித்ததும், பிறவும் காண்க. நீறுசேர் - வேதியர்களும் நீறு சேர்வோராயினும் தொண்டர்க்கு நீறு சிறப்புரிமை என்பார் நீறுசேர் திருத்தொண்டர் என்றார். திரு - என்றது சிவச் சார்பு.
நிகரிலாதவர் - பிள்ளையார். "தாவில்தனிச் சிவஞான" நிறைவு பெற்றாராதலின், சிவத்தன்மை பெற்றனர்; ஆதலின் ஓர் உவமனில்லியாகிய சிவம் போன்றார்.
அணிவார் நகர்வலஞ் செய்தார் என வரும்பாட்டுடன் முடிக்க. அணிவார் - அணிவாராய்; முற்றெச்சம். காப்புநாண் - கௌதுகபந்தனம் என்பர்.

1182

3081. (வி-ரை.) விதியுளி - விதித்த நெறிகளின் வழக்கு.
வேத வாய்மையின் - வேதங்களின் சத்தியவாக்காக விதித்த.
வினையினால் விளங்க - இவர்கள் இயற்றும் சடங்குகளால் விளக்கம் பெற.
உலகியன்முறை யொழுக்கமும் பெருக - வேதங்களின் விதிமுறை என்பது மட்டுமேயன்ற உலகியலிலும் அவை முறைப்பட்டு வரும் சீல ஒழுக்கமுமாம் என்பது. "உலகியல் வேதநூ லொழுக்கம்" (2718); சிவஞானப் பிள்ளையாரது திருமணத்துக்கு இச்சடங்குகளினாலாய பயன் ஒன்றுமில்லை எனவும், இவை இவை ஈண்டு வேண்டப்படுவனவல்ல வெனவும் குறிப்பார், வேததியுளி வினையினால் விளங்கவும் உலகியல் முறை ஒழுக்கம் பெருகவும் இதனைச் செய்தார் என்றார். "சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிது மணுகாமை அறிந்தாராயினும் ஆன்றோராசாரம் பாதுகாத்தற் பொருட்டும், மாணாக்கர்க் கறிவுறுத்தற் பொருட்டும் முதற்கண் இடையூறு நீக்குதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்ததுவதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்" என்று மெய்கண்டதேவர் தாம் அருளிய சிவஞானபோத நூலின் மங்கல வாழ்த்துக் கூறியதனைப்பற்றி எமது மாதவச் சிவஞான முனிவர் (சிற்றுரை) விளக்கஞ் செய்தமை ஈண்டு நினைவுகூர்தற்பாலது.
மறை வழக்கம் விளங்கி ஓங்க அவதரித்த பிள்ளையார் அந்த வேத ஒழுக்கம் நிலைபெறற் பொருட்டே திருமணஞ் செய்தருள உடன்பட்டருளினா ராதலின் (3056 - 3057) தமது மணத்தில் மறைச் சடங்குகளுக் குடன்படவேண்டியதாயிற்று; இன்றேல் உலகம் மயங்கி மறைவிதிச் சடங்குகளை விட்டு உலகியல் ஒழுக்கங் குன்றக் காரணமாகும்என்க.
கவினார் மாதர் மைந்தர்கள் - மங்கல முறையில் சதிபதிகளாக வருவோர்.
காப்புநாண் நகர்வலஞ் செய்தார் - இஃது இச்சடங்கின் மரபு. செய்தார் - செய்வித்தார்; விவ்விகுதி; தொக்குநின்ற பிறவினை.

1183

3082
கர்வ லஞ்செய்து புகுந்தபின் னவமணி யணிந்த
புகரில சித்திர விதானமண் டபத்தினிற் பொலியப்